சான்ஃப்ரான்ஸிஸ்கோவிலுள்ள கோல்டன்கேட் பிரிட்ஜிற்கு சென்றபோது எடுத்த படங்களில் சில.
ட்ரெயினிற்காக இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுமாக பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தபோது.ட்ரெயின் வரும்போது அவசரத்தில் படம் எடுக்க மறந்தாச்சு.
Golden gate bridge.கூகுளில் தட்டிப்பார்த்தால் அதைப்பற்றிய முழு விவரமும் கிடைத்துவிடும்.
பனி படர்ந்துள்ள அந்த ப்ரிட்ஜின்மேல் நடந்து செல்வதிலும் ஒரு சந்தோஷம்.
நாளை மீதிப்படங்களுடன்…
12:18 பிப இல் நவம்பர் 7, 2012
நாங்க இன்னும் SFO பக்கம் வரவே இல்லை, சீக்கிரம் வந்து சுற்றிப் பார்க்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிடும் படங்களைப் பகிர்ந்திருக்கீங்க! 🙂 Labour day ட்ரிப்பா சித்ராக்கா?
நீலக் கோட் அணிந்திருப்பவரும், அவர் கூட இருப்பவரும் கூட முகத்தைக் காட்டாம முதுகையே காட்டறாங்களே? ஒய்ய்ய்ய்ய்ய்ய்? 😉 🙂 🙂
2:31 பிப இல் நவம்பர் 8, 2012
சீக்கிரமே வந்து ஜாலியா சுத்திப் பாருங்க.இது ஜூன் 29th போனது.ஆனால் அங்கு சம்மர் மாதிரியே தெரியல.நல்லாருந்துச்சு.
“நீலக் கோட் அணிந்திருப்பவரும்,அவர் கூட இருப்பவரும் கூட முகத்தைக் காட்டாம முதுகையே காட்டறாங்களே? ஒய்ய்ய்ய்ய்ய்ய்?”___இது வீரமில்லை,புறமுதுகுன்னு அப்பவே சொன்னேன்,அவங்க கேக்கல.
அது என் வீட்டுக்காரரும்,மகளும்தான்.அவங்க ஒழுங்காத்தான் போனாங்க. நான்தான் முகத்தைக் காட்டியதையெல்லாம் எடிட் பன்னிட்டேன்.வருகைக்கு நன்றி மகி.