பீர்க்கங்காய் துவையல்

தேவையானபொருள்கள்:
பீர்க்கை_1

தாளிக்க:

கடுகு_ 1/2 டீஸ்பூன்
உளுந்து: 1/2 டீஸ்பூன்
சீரகம்_ 1/4 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிதுகாய்ந்த மிளகாய்_2
புளி_கோலிக்குண்டு அளவு
நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கேற்ப

செய்முறை:

பீர்க்கையை நன்றாகக் கழுவி சிறு துண்டங்களாக நறுக்கவும்.ஒரு வாணலியில் பாதி எண்ணெயை ஊற்றி மிளகாயை நிறம் மாறாமல் வறுத்தெடுக்கவும்.அதே வாணலியில் பீர்க்கையைப் போட்டு நன்கு வதக்கவும்.தண்ணீர் விட வேண்டாம்.பிறகு புளியையும் போட்டு நன்கு வதக்கிக்கொள்ளவும் . இவை ஆறியதும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.பிறகு வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி கடுகு,உளுந்து,சீரகம், பெருங்காயம் இவற்றைத் தாளிக்கவும்.தாளித்ததில் பாதியை துவையலில் கொட்டி மீண்டும் 2 (அ) 3 சுற்றுகள் ஓடவிட்டு எடுத்து வைக்கவும்.இறுதியில் மீதி தாளிதத்தைத் துவையலில் கொட்டி கலந்து வைக்கவும்.

குறிப்பு:

பூண்டின் மணம் பிடித்தால் தாளிக்கும்போது  2 பூண்டுப் பற்களை சேர்த்து வதக்கி அரைக்கலாம்.

2 பதில்கள் to “பீர்க்கங்காய் துவையல்”

  1. priya Says:

    பீர்க்கங்காய் துவையல் உங்க குறிப்பின்படி செய்தேன் சித்ரா. சூப்ப்ப்பரா இருந்திச்சு. படம் எடுத்திருக்கேன்.ரெம்ப நன்றி நல்ல குறிப்பிற்கு.

    • chitrasundar5 Says:

      ப்ரியசகி,

      சேர்க்க வேண்டியதை, முக்கியமா எண்ணெயைக் கொஞ்சம் கூட்டிக்கொள்ளலாம். அப்போல்லாம் கொஞ்சம்கொஞ்சமாத்தான் சேர்ப்பேன். இப்போ எல்லாமே கையால் எடுத்துப்போடுவதுதான்.

      செய்து பார்த்து படம் எடுத்து, பின்னூட்டமும் கொடுத்ததில் மகிழ்ச்சி.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: