தேவையானவை:
சேப்பங் கிழங்கு_4
சீரகம்_ 1/4டீஸ்பூன்
பெருஞ்சீரகம்_1/4 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
மிளகாய் தூள்_ 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்_1/4 டீஸ்பூன்
தயிர்_1 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
கறிவேப்பிலை_ 5 இலைகள்
எண்ணெய்_2 டீஸ்பூன்
செய்முறை:
சேப்பங்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து விருப்பமான வடிவத்தில் நறுக்கவும்.ஒரு வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றி சீரகம், பெருஞ்சீரகம்,பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து கிழங்கைப் போட்டு வதக்கவும்.பிறகு அதில் மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,உப்பு போட்டுக் கிளறி தயிர் சேர்த்து நன்றாக கிளறி மூடி போட்டு மிதமான தியில் வேகவிடவும்.நடுநடுவே கிளறிவிட்டு மசாலா சிவந்ததும் இறக்கவும்.
மறுமொழி இடுக