தேவையான பொருள்கள்:
பச்சரிசி_ 2 கப்
புதினா_1 கட்டு
கொத்துமல்லி_1 கட்டு
பச்சை மிளகாய்_2
புளி_ஒரு சிறிய உருண்டை
உப்பு_தேவையான அளவு
தாளிக்க:
கடுகு_1/2 டீஸ்பூன்
உளுந்து_1/2டீஸ்பூன்
கடலைப் பருப்பு_ 1 டீஸ்பூன்
வேர்க் கடலை_ 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்_2
சீரகம்_1/4 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
நல்லெண்ணெய்_ 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை_ 5 இலைகள்
செய்முறை:
அரிசியை சிறிது உப்பு போட்டு வேக வைத்து வடித்து ஆறவிடவும்.சாதம் நன்கு உதிர் உதிராக இருக்கட்டும்.
புதினா,கொத்துமல்லியை நன்றாக அலசி நீரை வடிய வைக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தி கடுகு,உளுந்து,காய்ந்த மிளகாய் தாளித்து தனியே வைக்கவும்.அதே வாணலியில் பச்சை மிளகாய் போட்டு வதக்கி கூடவே புளியையும் வதக்கி அடுப்பை நிறுத்திவிட்டு புதினா,கொத்துமல்லியை அதில் சேர்த்து கிளறவும்.வாணலியில் உள்ள சூட்டிலேயே கீரை வதங்கிவிடும்.
இதை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அதனுடன் தாளித்து வைத்துள்ள பொருள்களையும் போட்டு அரைத்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றி சீரகம், பெருங்காயம், வேர்க்கடலை,கடலைப் பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள விழுதைக் கொட்டி ஒரு கொதி வரும்போது சாதம்,சிறிது உப்பு சேர்த்து கிளறி விடவும்.மிதமான தீயில் மூடி போடாமல் சிறிது நேரம் வைத்து இறக்கவும். மூடி போட்டல் பச்சை நிறம் மாறிவிடும். ஏதாவது வறுவல்,வத்தலுடன் நன்றாக இருக்கும்.
மறுமொழி இடுக