தேவை:
அரிசி மாவு_ 2 கப்
உளுந்து மாவு_ 1/2 கப்
(உளுந்தை சுமார் 2 கப் அளவிற்கு எடுத்து வெறும் வாணலியில் சிவக்க வறுத்து முந்தைய பதிவில் கூறியபடியே நைசாக அரைத்துக் கொள்ளவும்.இந்த மாவை தேன் குழல் முறுக்கிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.)
எள்_ 1 டீஸ்புன்
ஓமம்_1/2 டீஸ்புன்
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவையான அளவு
எண்ணெய்_தேவையான அளவு
செய்முறை:
அரிசி மாவு,உளுந்து மாவு இவை இரண்டையும் 2 : 1/2 என்ற விகிதத்தில் எடுத்துக்கொள்ளவும்.இதனுடன் எள்,ஒமம்,பெருங்காயம்,உப்பு சேர்த்துக் கிளறி சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.முறுக்கு குழலில் தேன்குழல் அச்சைப் போட்டு பேப்பர் டவலில் முறுக்குகளை பிழிந்து கொள்ளவும்.
எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொன்றாக எடுத்து எண்ணெயில் போட்டு இரு புறமும் சிவக்க விட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
குறிப்பு:
இதற்கு பயன்படுத்தியது போக மீதமுள்ள உளுந்து மாவை காற்று புகாமல் எடுத்து வைத்துக்கொண்டால் வேண்டும்போது மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்
மறுமொழி இடுக