தேவை:
பச்சரிசி_2 கப்
உப்பு_சிறிது
பூரணம்:
வேர்க்கடலை _1 கப்
வெல்லம்_3/4 கப்
எள்_1 டீஸ்பூன்
ஏலக்காய்_1
செய்முறை:
அரிசியை நன்றாக ஊறவைத்து நீரை வடிய வைத்து மிக்ஸியில் போட்டு ஈர மாவாக இடித்துக்கொள்ளவும்.மாவை இட்லிப் பானையில் வைத்து அவித்துக் கொள்ளவும் (நன்றாக அவிந்ததா என்பதை அறிய மாவை கைகளால் தொட்டால் அது நன்றாக வெந்திருந்தால் பிசுபிசுவென கைகளில் ஒட்டாது.மாவு நன்றாக வேகவில்லை என்றால் கொழுக்கட்டை முழுதாக வராமல் உடைந்து போகும்) இப்போது மாவை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
பூரணம் தயாரித்தல்:
வேர்க்கடலையை வறுத்து தோலியை அகற்றிவிட்டு அதனுடன் பொடித்த வெல்லம்,வறுத்த எள்,பொடித்த ஏலக்காய் சேர்த்து கரகரப்பாக இடித்துக்கொளளவும்.இப்போது பூரணம் தயார்.
ஆற வைத்த மாவில் சிறிது உப்பைப் போட்டு இளஞ்சூடான தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கெட்டியாக பிசைந்துகொள்ளவும்.
அடுத்து பிசைந்து வைத்த மாவில் இருந்து ஒரு எலுமிச்சை அளவு எடுத்து உள்ளங்கையில் வைத்து உருண்டையாக்கி பின்னர் ஒரு கிண்ணம் போல் செய்து அதில் கொஞ்சம் பூரணத்தை வைத்து படத்தில் உள்ளது போல் மடித்து ஓரத்தை அழுத்தி விடவும்.உருண்டை மாதிரியும் செய்யலாம்
வேகவைக்குமுன்
இதுபோல் எல்லாவற்றையும் செய்துகொண்டு இட்லிப்பானயில் ஒரு தட்டை வைத்து அதில் ஒன்றன் மேல் ஒன்று ஒட்டாமல் அடுக்கி வேகவைக்கவும்.
வெந்த பிறகு எடுக்கவும்.மூடியைத் திறந்து தொட்டுப் பார்த்தால் கையில் ஒட்டாமல் இருந்தால் வெந்துவிட்டது எனலாம்.
பூரணத்தை அவரவர் விருப்பம் போல் செய்துகொள்ளலாம்.மாவை புதிதாக இடித்து செய்தால்தான் நன்றாக,சாஃப்டாக,சுவையாக இருக்கும்.
4:02 முப இல் ஜனவரி 19, 2013
purana thula vellam mix panna kola kola vena ayeduthu athuku yana pandrathu
9:55 முப இல் ஜனவரி 19, 2013
அபிநயா,
உங்க பெயர் அழகா இருக்கு.பூரணம் உதிரியாக இருந்தால்தான் ஆவியில் வேகும்போது கெட்டியாக இருக்கும்.நீர்த்து இருந்தால் குழைந்தாற்போல்தான் வரும்.
தேங்காய்த்துருவியில் துருவிப் போட்டாலும் அப்படித்தான் இளகிவிடும்.
மண்டை வெல்லமாகப் பார்த்து (உருண்டை உருண்டையாக இருக்கும்) வாங்கி,உடைத்து சேர்க்கலாம்.எல்லாவற்றுக்கும் மேலாக கல்லுரல் இருந்து இடித்துப் போட்டால் சூப்பராக இருக்கும்.
‘purana thula vellam mix panna’___வெல்லத்தைத் தனியாக சேர்க்க வேண்டாம்.வெல்லம்,வேர்க்கடலை,எள்,ஏலக்காய் என எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து,இடித்துப் போடுங்க.எப்படி வந்ததுன்னும் வந்து சொல்லுங்க.