தேவை:
முருங்கைக் கீரை_ 2 கப்
பச்சைப் பருப்பு_ 1/4 கப்
சின்ன வெங்காயம்_2
தக்காளி_1/4
பச்சை மிளகாய்_1
பூண்டு_ 2 பற்கள்
உப்பு_தேவையான அளவு
தாளிக்க:
கடுகு_ 1/4 டீஸ்பூன்
உளுந்து_ 1/4 டீஸ்பூன்
மிளகு_5
சீரகம்_ 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
நல்லெண்ணெய்_ 1 டீஸ்பூன்
செய்முறை:
பச்சைப் பருப்பை வெறும் வாணலியில் வறுத்து தண்ணீர் விட்டு மலர வேகவைக்கவும்.அது வேகும்போதே சின்ன வெங்காயம்,தக்காளி,பூண்டு,பச்சை மிளகாய் சேர்த்து வேகவைக்கவும்.கடைசியில் கீரை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.நீண்ட நேரம் கீரை அடுப்பில் இருந்தால் கறுத்து விடும்.அதனால் கசக்கும். கீரை போட்ட பிறகு மூட வேண்டாம்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாக தாளித்து கீரையில் கொட்டவும்.நன்றாக ஆறியதும் கடைந்து வைக்கவும்.
மறுமொழி இடுக