தேவை:
வெண்டைக்காய்_1 கப் (நறுக்கியது)
மிளகாய் தூள்_1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
தயிர்_1 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய்_2 டீஸ்பூன்
சீரகம்_கொஞ்சம்
பெருங்காயம்_சிறிது
செய்முறை:
வெண்டைக்காயை நீள வாக்கில் நாலாகப் பிளந்து மேலும் குறுக்காக நறுக்கி வைக்கவும்.சமைப்பதற்கு 1/2 மணி நேரம் முன்னதாகவே நறுக்கி வைத்தால் சமைக்கும்போது கொஞ்சம் வழவழப்பு குறைவாக இருக்கும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் சீரகம்,பெருங்காயம் தாளித்து வெண்டைக்காயைப் போட்டு வதக்கி,(மிதமான தீயில்) பிறகு தயிர் சேர்த்து வதக்கவும்.தயிர் சேர்ப்பதால் வழவழப்பு இருக்காது.சிறிது வதங்கியதும் மிளகாய் தூள்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.நன்றாக வெந்ததும் இறக்கவும்.
குறிப்பு:
காய் வேகும்போது தண்ணீர் சேர்க்க வேண்டாம்.கொழகொழப்பாகிவிடும்.மேலும் மூடி போட்டாலும் காயின் நிறம் மாறிவிடும்.
12:55 முப இல் ஒக்ரோபர் 10, 2010
very nice,decorative and delicious…………………….