சோமாஸ்

 

தேவை:

மேல் மாவிற்கு:

மைதா_ 2 கப்
உப்பு_தேவையான அளவு

பூரணம் செய்வதற்கு:

ரவை_1 கப்
பொட்டுக்கடலை_1/2 கப்
சர்க்கரை_1 கப்
முந்திரி_10
ஏலம்_1
கசகசா_1 டீஸ்பூன்
தேங்காய் பூ_1 டீஸ்பூன்(விருப்பமானால்)
எண்ணெய்_பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

மேல் மாவு செய்தல்:

முதலில் மைதா மாவுடன் உப்பைப் போட்டு கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து மூடி வைக்கவும்.பூரி மாவுப் பதத்தில் இருக்க வேண்டும்.

பூரணம் செய்தல்:

வெறும் வாணலியில் ரவை,பொட்டுக்கடலை,முந்திரி,கசகசா இவற்றை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். தேங்காய்ப் பூ போடுவதாக இருந்தால் சிறிது நெய் விட்டு சிவக்க வறுத்துக்கொள்ளவும்.இவை அனைத்தும் ஆறியதும் இவற்றுடன்  சர்க்கரை,பொடித்த ஏலம் போட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.இப்போது பூரணம் தயார்.

இப்போது மாவிலிருந்து சிறு உருண்டை அளவிற்கு எடுத்து பூரிக்குத் தேய்ப்பது போல் தேய்த்து அதை சோமாஸ் கரண்டியில் வைத்து தேவையான பூரணத்தையும் வைத்து  ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி கரண்டியை அழுத்தி மூட வேண்டும். கரண்டியை மூடிய பிறகு ஓரத்தில் உள்ள அதிகப்படியான மாவை எடுத்து விட வேண்டும்.இப்போது கரண்டியைத் திறந்து சோமாஸை எடுத்து மூடி வைக்கவும்.இது போலவே எல்லா மாவையும் போட்டு  வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய வைத்து சோமாஸை ஒவ்வொன்றாகவோ(அ)எண்ணெய் கொண்ட மட்டும் போட்டு ஒருபுறம் சிவந்ததும் திருப்பிவிட்டு மறுபுறம் சிவந்ததும் எடுத்து விடவும்.ஆறியதும் கண்ணாடி டப்பாவில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

Advertisements

6 பதில்கள் to “சோமாஸ்”

  1. திண்டுக்கல் தனபாலன் Says:

    வீட்டில் குறித்துக் கொண்டார்கள்… ஆனால் இந்தளவு அழகாக வருமா என்று தெரியவில்லை…

  2. chollukireen Says:

    jமிகவும் அழகாகவும் ருசியாகவும் இருக்கு. திருஷ்டியா போரமாதிறி இருக்கு.

    • chitrasundar5 Says:

      காமாட்சிமா,

      நீங்க அழகா&ருஸியா இருக்குன்னு சொல்லும்போதே ஜில்லுன்னு இருக்கு.
      மருந்துக்குக்கூட கிச்சன் பக்கம் போகமாட்டேன்.இப்போ வேறு வழியில்லை. செய்தால்தான் சாப்பிட முடியும் என்றாகிவிட்டது.நன்றி அம்மா.உங்க மிளகாய் பஜ்ஜிக்கு என்னிடமிருந்து இன்னும் திருஷ்டிதான்.அன்புடன் சித்ரா.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: