தேவையானப் பொருள்கள்:
மரவள்ளிக்கிழங்கு _1
புழுங்கள் அரிசி_1/2 கப்
சின்ன வெங்காயம்_10
பச்சை மிளகாய்_2
கறிவேப்பிலை_10 இலைகள்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவையான அளவு
எண்ணெய்_பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
அரிசியைத் தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும்.கிழங்கை கேரட் துருவியில் துருவி வைக்கவும்.அரிசி நன்றாக ஊறியதும் கிரைண்டரில் போட்டு கெட்டியாக மைய அரைத்துக்கொள்ளவும்.கடைசியில் துருவிய கிழங்கையும் அதனுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.வடை மாவு பதத்தில் இருக்கட்டும்.மாவை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
அடுத்து வெங்காயம்,பச்சை மிளகாய், கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை இவற்றைப் பொடியாக நறுக்கி மாவுடன் கலந்துகொள்ளவும்.மேலும் உப்பு,பெருங்காயம் இவற்றையும் போட்டு நன்றாகப் பிசைந்துகொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.எண்ணெய் சூடேறியதும் மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை அளவிற்கு எடுத்து உள்ளங்கையில் வைத்து வடைபோல் தட்டி எண்ணெயில் போடவும்.இவ்வாறு எண்ணெய் கொண்டமட்டும் போட்டு ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறு பக்கம் வெந்ததும் எடுக்கவும்.உருண்டையாக உருட்டி போண்டா மாதிரியும் போடலாம்.அல்லது வடையின் நடுவில் துளையிட்டும் போடலாம்.இதை சூடாக சாப்பிட்டால்தான் நன்றாக இருக்கும்.
மறுமொழி இடுக