தேவையானப் பொருள்கள்:
தயிர்_1/2 கப்
செளசெள_1 கப் (நறுக்கியது)
துவரம் பருப்பு_1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு_1 டீஸ்பூன்
சீரகம்_1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய்_1
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
உப்பு_ தேவையான அளவு
தாளிக்க:
நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
ஓமம்_கொஞ்சம்(வாசனைக்கு)
மணத்தக்காளி வற்றல்_கொஞ்சம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_1 கொத்து
செய்முறை:
பருப்புகள் இரண்டையும் தனித்தனியாக வெறும் வாணலியில் சிவக்க வறுத்து வைக்கவும்.அதே சூட்டில் சீரகத்தைப் போட்டு வறுத்துக்கொள்ளவும். பருப்புகளைத் தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும்.அது ஊறுவதற்குள் செளசெள காயை சிறுசிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.வெந்ததும் தண்ணீரை வடித்து விடவும்.
பருப்புகள் நன்றாக ஊறியவுடன் மிக்ஸியில் போட்டு தேவையானத் தண்ணீர் சேர்த்து மைய அரைத்தெடுக்கவும்.கூடவே பச்சை மிளகாய், சீரகம் , கறிவேப்பிலை 2 இலைகள் சேர்த்து அரைத்து எடுக்கவும்.தயிரில் 2 கப்புகள் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் நீர்க்க கடைந்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளிக்கவும். அடுத்து அரைத்த பருப்புக் கலவையை ஊற்றி கட்டித் தட்டாமல் கலக்கி விடவும். அடுத்து மஞ்சள் தூள்,உப்பு,செளசெள இவற்றை அதில் போட்டு மிதமானத் தீயில் கொதிக்கவிடவும்.கொஞ்ச நேரம் கொதித்த பின் மோரை ஊற்றிக் கலக்கி இறக்கி விடவும்.அடுப்பிலேயே இருந்தால் மோர் திரிந்து கெட்டு விடும்.
இதையே வேறொரு முறையில் வைப்பதானால் முதலில் குழம்பைக் கொதிக்க விட்டுக் கடைசியில் தாளித்துக் கொட்டியும் இறக்கலாம்.
குறிப்பு:
இக் குழம்பிற்கு செளசெள நீங்கலாக வெண்டைக்காய்,பூசனிக்காய் போன்ற காய்களையும் பயன்படுத்தலாம்.எந்தக் காயாக இருந்தாலும் முதலில் காயைத் தனியாக வேக வைத்துத்தான் சேர்க்க வேண்டும்.வெண்டைக்காயை மட்டும் எண்ணெயில் நன்றாக வதக்கிச் சேர்க்க வெண்டும்.
மறுமொழி இடுக