தேவையானப் பொருள்கள்:
பாசுமதி அரிசி (அ) பச்சரிசி _ 2 கப்புகள்
தக்காளி_2
சின்ன வெங்காயம்_2
இஞ்சி_ஒரு சிறு துண்டு
பச்சை மிள்காய்_1
மிளகாய்த் தூள்_2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_ஒரு சிட்டிகை
தேங்காய்ப் பால்_1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு_1 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_1 கொத்து
உப்பு_தேவையான அளவு
தாளிக்க:
நல்லெண்ணெய்_1 டேபிள்ஸ்பூன்
கடுகு
உளுந்து
கடலைப் பருப்பு
சீரகம்_1/4 டீஸ்பூன்
பெருஞ்சீரகம்_1/4 டீஸ்பூன்
முந்திரி_5
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_1 கொத்து
செய்முறை:
முதலில் அரிசியை முக்கால் பதமாக வேக வைத்து உதிர் உதிராக ஆற வைக்கவும்.வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றி சூடு படுத்தவும். சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளிக்கவும்.அடுத்து வெங்காயம்,இஞ்சி சேர்த்து வதக்கவும்.பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.அடுத்து அதனுடன் மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.பிறகு தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி காரம்,உப்பு சரிபார்த்து ஆறிய சாதத்தைக் கொட்டிக் கிளறி,எலுமிச்சை சாறு சேர்த்து மிதமானத் தீயில் சிறிது நேரம் மூடி வைக்கவும்.பிறகு அடுப்பிலிருந்து இறக்கி கொத்துமல்லி இலைத் தூவி லேசாகக் கிளறி விடவும்.
நீண்ட நேரம் அடுப்பில் இருந்தாலோ அல்லது அடிக்கடி வேகமாகக் கிளறினாலோ சாதம் குழைந்து விடும்.
மறுமொழி இடுக