தேவையானப் பொருள்கள்:
தேங்காய்_1/4 மூடி
பொட்டுக் கடலை_1/4 கப்
கொத்துமல்லி இலை_ஒரு கைப்பிடி (உருவியது)
பச்சை மிளகாய்_2
முந்திரி_2
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
உப்பு_தேவையான அளவு
தாளிக்க:
நல்லெண்ணெய்_1 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
காய்ந்த மிள்காய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை_5 இலைகள்
செய்முறை:
தேவையானப் பொருள்களை எடுத்து வைக்கவும்.தேங்காயை சிறுசிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு பல்ஸில் வைத்து ஒரு சுற்று சுற்றி ,பிறகு அதனுடன் தேவையானப் பொருள்கள் எல்லாவற்றையும் சேர்த்து , தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்து மைய அரைத்தெடுக்கவும்.அதை ஒரு கிண்ணத்தில் வழித்து எடுக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றித் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து மூடி வைக்கவும்.இது இட்லி,தோசை,வடை,அடை போன்றவற்றிற்குப் பக்க உணவாகப் பயன்படுத்தலாம்.கெட்டியாக அரைத்தால் துவையலாகவும் உபயோகிக்கலாம்.
மறுமொழி இடுக