தேவையானப் பொருள்கள்:
முருங்கைக்காய்_1 (அ) 2
புளி_நெல்லிக்காய் அளவு
சின்ன வெங்காயம்_5
தக்காளி_பாதி
பூண்டு_10 பற்கள்
மிளகாய்த்தூள்_1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
வறுத்துப் பொடிக்க:
கொத்துமல்லி விதை_1 டீஸ்பூன்
சீரகம்_1/2 டீஸ்பூன்
வெந்தயம்_1/4 டீஸ்பூன்
தாளிக்க:
நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
வடகம்
சீரகம்
கடலைப் பருப்பு
வெந்தயம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_5 இலைகள்
செய்முறை:
புளியை அது மூழ்கும் அளவுத் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். வெங்காயம், பூண்டு இரண்டையும் தோலுரித்து நறுக்கி வைக்கவும்.தக்காளியையும் நறுக்கவும்.
கொத்துமல்லி,சீரகம்,வெந்தயம் இவற்றைத் தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து ஆற வைத்து பொடித்துக்கொள்ளவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிச் சூடேற்றி தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கும்போதே மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கி புளியைக் கரைத்து ஊற்றவும்.தேவையானத் தண்னீர் சேர்த்து உப்பு,காரம் சரிபார்த்து மூடி கொதிக்க விடவும்.ஒரு கொதி வந்ததும் முருங்கைக்காயைக் கழுவிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் குழம்பில் போட்டுக் கலக்கி விடவும்.
குழம்பு நன்றாகக் கொதித்து,காய் வெந்து வரும்போது வறுத்துப் பொடித்தப் பொடியைப் போட்டு கலக்கி விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.இது சாதம்,இட்லி,தோசை இவற்றிற்கு நன்றாக இருக்கும்.
குறிப்பு:
குழம்பை இறக்கும்போது அரை கைப்பிடி அளவிற்கு வெந்தயக் கீரை போட்டு இறக்கினால் நல்ல வாசனையாகவும்,சுவை அதிகமாகவும் இருக்கும்.முருங்கைக்காய் fresh ஆக இருந்தால் குழம்பு ஒரு கொதி வந்த பிறகு போடலாம்.frozen காயாக இருந்தால் வெங்காயம்,தக்காளி வதக்கும்போது இதையும் சேர்த்து வதக்கினால்தான் காய் வேகும்.
மறுமொழி இடுக