தேவையானப் பொருள்கள்:
பச்சைப்பருப்பு_1/2 கைப்பிடி
கத்தரிக்காய்_4 (சிறியது)
பச்சை மிளகாய்_2
சின்ன வெங்காயம்_3
தக்காளி_பாதி
பூண்டு_2 பற்கள்
மஞ்சள் தூள்_ஒரு பின்ச்
உப்பு_தேவையான அளவு
கொத்துமல்லி இலை_கொஞ்சம்
தாளிக்க:
நல்லெண்ணெய்_1 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
பச்சைப் பருப்பை நன்கு சிவக்க வறுத்துப் போதுமானத் தண்ணீர் விட்டு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.பருப்பு பாதி வேகும் போதே அதனுடன் கத்தரிக்காய்,பச்சை மிளகாய்,வெங்காயம் 2,தக்காளி,பூண்டு சேர்த்து வேக விடவும்.எல்லாம் நன்றாக வெந்த பிறகு இறக்கி ஆற வைக்கவும்.ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
இதை மீண்டும் அதே பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் உப்பு போட்டு, கொத்துமல்லி தூவி இறக்கவும்.
மீதமுள்ள ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி மசியலில் கொட்டிக் கலக்கவும்.
இது இட்லி,தோசை ஆகியவற்றிற்கு சூப்பர் காம்பினேஷன்.
பச்சைப் பருப்பிற்கு பதில் துவரம் பருப்பைக்கூடப் பயன்படுத்தலாம்.
மறுமொழி இடுக