தேவையானப் பொருள்கள்:
கீரை_1 கட்டு
சின்ன வெங்காயம்_3
தக்காளி_1/2
பச்சை மிளகாய்_1
உப்பு_தேவையான அளவு
தாளிக்க:
கடுகு
உளுந்து
மிளகு_5
சீரகம்_ 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்_2
பூண்டு_5 பற்கள்
பெருங்காயம்_சிறிது
நல்லெண்ணெய்_ 2 டீஸ்பூன்
இதில் நான் பயன்படுத்தியக் கீரை mustard green . இந்த முறையில் எல்லாக் கீரைகளையும் செய்யலாம்.
செய்முறை:
கீரையைக் கழுவி நீரை வடிய வைத்து நறுக்கி வைக்கவும்.ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம்,பச்சை மிளகாய் வதக்கவும்.அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.பிறகு கீரை சேர்த்து வதக்கவும.மூட வேண்டாம். சிறிது நேரத்திலேயே வதங்கிவிடும்.இது ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி வைக்கவும்.
மீண்டும் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து மிக்ஸியில் உள்ள கீரையில் கொட்டி சிறிது கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.தேவையான உப்பு சேர்த்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.தண்ணீர் எதுவும் சேர்க்கத் தேவை இல்லை.இது சாதத்துடன் மிகவும் நன்றாக இருக்கும்.
கீரை சாதம் தயார் செய்வதாக இருந்தால் 2 கப் அரிசியை வேக வைத்து சாதத்தை வடித்து ஆற வைக்கவும்.ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடுபடுத்தி பெருங்காயம் தாளித்து கிரை மசியலை அதில் கொட்டி அடுப்பை அணைத்து விடவும்.அதே சூட்டிலேயே சாதத்தைக் கொட்டிக் கிளறி உப்பு சரி பார்க்கவும்.இதற்கு வறுவல், பொரியல், வற்றல் எல்லாமே நன்றாக இருக்கும்.
9:46 பிப இல் பிப்ரவரி 22, 2013
How does this keerai taste Chitrakka? Never had this..is it good? 😉 so that I can try it when I see this next time.
10:54 முப இல் பிப்ரவரி 23, 2013
டேஸ்ட்டா இருக்கும்,ஆனா நல்லதான்னு தெரியல.ஒரு துண்டு புளி சேர்த்து வதக்கி அரைச்சா இன்னும் டேஸ்ட்டா இருக்கும்.மீதமானாலும் துவையல் மாதிரி பயன்படுத்திக்கலாம்.ஒரு தடவ ட்ரை பண்ணுங்க.