போளி

boliboli

தேவையானப் பொருள்கள்:

மேல் மாவிற்கு:‍

மைதா_4 கப்
சர்க்கரை_ஒரு துளி ( for taste )
உப்பு_ஒரு துளி ( for taste )
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
எண்ணெய்_ஒரு டேபிள்ஸ்பூன்

பூரணம் செய்வதற்கு:

கடலைப் பருப்பு_1 கப்
துவரம் பருப்பு_1 கப்
வெல்லம்_2 கப்
ஏலக்காய்_2

செய்முறை:

முதலில் மைதாவை சலித்து எடுத்துக் கொண்டு அதனுடன் சர்க்கரை, உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து கலந்துவிட்டு, எண்ணெயை சேர்த்து மாவு முழுவதும் பரவுமாறு நன்றாகப் பிசைந்து சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எண்ணெய் தடவி மூடி வைக்கவும்.

அடுத்து பூரணம் செய்வதற்கு கடலைப் பருப்பு,துவரம் பருப்பு இரண்டையும் நன்றாகக் கழுவிவிட்டு தேவையானத் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

மிகவும் குழைந்து போகாமல் மலர வேக வைக்க வேண்டும். வெந்ததும் நீரை வடித்து விடவும்.நீர் இருந்தால் பூரணம் கொழ கொழப்பாகிவிடும்.

நீர் முழுவதும் வடிந்த பிறகு நனைத்துப் பிழிந்த ஒரு பேப்பர் டவல் (அ) துணியில் கொட்டி உலர்த்தினால் மீதமுள்ள நீரும் வற்றிவிடும்.

இப்போது வெந்த பருப்பை மிக்ஸியில் போட்டு மழமழவென நன்றாகப் பொடித்துக்கொள்ளவும்.பிறகு ஒரு அடி கனமான கடாயில் பருப்பு பொடியுடன்,வெல்லத்தைப் பொடித்துப் போட்டு அடுப்பில் வைத்து மிதமானத் தீயில் கிளறி விடவும்.

வெல்லம் கரைந்து சிறிது நீர்த்து வரும்.விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.சிறிது நேரத்தில் நீர் வற்றி கெட்டியாக வரும்.அப்போது ஏலக்காயைப் பொடித்துப் போட்டுக் கிளறி இறக்கி ஆற வைக்கவும்.

போளி தட்டும் விதம்:

பூரணம் ஆறிய பிறகு சிறுசிறு எலுமிச்சை அளவிற்கு எடுத்து உருட்டி வைக்கவும்.

உருண்டையின் பாதி அளவிற்கு மேல் மாவில் இருந்து எடுத்து கையில் நல்லெண்ணெயைத் தொட்டுக்கொண்டு, உள்ளங்கை அகலத்திற்கு பரப்பிவிட்டு,அதன் நடுவில் பூரண உருண்டையை வைத்து மூடி,கவிழ்த்து வைத்து (பூரணம் வெளியில் வராமல்) சப்பாத்தி போல் கையாலேயே பரப்பி விடவும்.

எவ்வளவு அகலமாக‌ வேண்டுமானாலும் தட்டலாம்.பூரணம் சப்பாத்தியின் உள்ளே எல்லா இடத்திலும் பரவியிருக்க வேண்டும். அப்போதுதான் சாப்பிடும்போது சுவையாக இருக்கும்.

முதலில் ஒன்றிரண்டு தட்டுவதற்கு சிரமமாக இருக்கும்.அடுத்தடுத்து செய்யும்போது சுலபமாகி விடும்.

இதுபோல் தேவையானதைத் தயார் செய்துவிட்டு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி நெய் (அ) எண்ணெயைப் பயன்படுத்தி கல்லில் போட்டு ஒருபக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபக்கம் வெந்ததும் எடுக்கவும்.

குறிப்பு:

இதனை கடலைப்பருப்பு,பச்சப்பருப்பு இவற்றை தனித்தனியாக வைத்தோ அல்லது கலந்தோகூட செய்யலாம்.

4 பதில்கள் to “போளி”

 1. மகிஅருண் Says:

  போளி சூப்பரா இருக்கு. நாங்க கடலைப்பருப்பு+வெல்லம் மட்டும் அல்லது தேங்காய்+வெல்லம் சேர்த்து செய்வோம். துவரம்பருப்பு சேர்த்து செய்ததில்லை! இதுவும் செய்ய நினைச்சுட்டே இருக்கேன், எள்ளுருண்டை, கொழுக்கட்டை இப்படி லிஸ்ட் ஏகத்துக்கும் இருக்கு. எப்ப எல்லாம் செய்ய டைம் வருமோ தெரில! 😉 மனசிலயே எல்லாம் சமைச்சு சாப்ட்டுட்டு இருக்கேன்னு வைங்களேன்! :)))

  • chitrasundar5 Says:

   இங்கு வந்த புதிதில் ஒரு தோழி இதை செய்து காட்டினார்.அதன் பிறகுதான் செய்கிறேன்.அவர் இந்த ரெண்டு பருப்பும் சேர்த்துதான் செய்தார்.ஊரில் இருந்தவரை ஸ்வீட் கடையில் வாங்கியதோடு சரி.

   எள்ளுருண்டை செய்ததில்லை.கொழுக்கட்டை ரொம்பவே பிடிக்கும். எங்கம்மா வருஷத்துல ரெண்டு தடவதான் (விநாயகர் சதுர்த்தி & சிவராத்திரி) செய்வாங்க.ஆனால் நான் மாசத்துல ரெண்டு தடவ செஞ்சிடுவேன்.கொழுக்கட்டைக்கு மேல்மாவு சரியா வந்திடுச்சுன்னா மற்ற வேலைகள் எளிது.

 2. rajalakshmiparamasivam Says:

  நான் கையால் தட்டுவதில்லை. விரல்களில் வலி வருகிறது. அதனால் நீங்கள் சொல்வது போல் எல்லாம் செய்ததும் மைதா மாவை எடுத்து மிகச் சிறய சப்பாத்தியை இட்டுக் கொண்டு பூரணத்தை அதன் மேல் வைத்து. இழுத்து மூடி மீண்டும் சப்பாத்தி போல் மெதுவாக இட்டு விட்டால் மிகப் பெரியதாக வருகிறது. என்ன ஒரு நல்ல விஷயமென்றால் எண்ணெய் நிறைய தேவைப் படாது. எண்ணெய் பயமில்லாமல் சாப்பிடலாம்.

  • chitrasundar5 Says:

   நான் முதல் நாள் நான்கைந்து செய்வேன்,அடுத்த நாளும் ஒரு நான்கைந்து. அவ்வளவுதான்.நிறைய செய்தால் வலிக்கும்தான்.நிறைய செய்யும்போது எனக்கு விரல்கள் வலிக்காது.ரைட் ஹேண்ட் ஷோல்டர் வலிக்கும்.சரியாக வரும்போது நீங்க செய்வதுபோலவே செய்துகொள்ளலாம்.

   முன்பெல்லாம் வெறும் மைதா மாவாலேயே செய்வேன்.இந்த முறை கொஞ்சம் ரவை + அரிசிமாவு சேர்த்து செய்தேன்.சூப்பரா வந்துச்சு.ஞாபகமாக செய்முறையில் கொஞ்சம் திருத்தம் செய்ய வேண்டும்.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: