நான் இங்கு பயன் படுத்தியுள்ள கீரை bok choy. விருப்பமானால் முழு கீரையை சாம்பாருக்குப் பயன்படுத்தலாம்.அல்லது தண்டினைப் பிரித்து கூட்டு,பொரியல் செய்யப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தேவையானப் பொருள்கள்:
கீரை_ஒரு கட்டு
துவரம் பருப்பு_1/2 கப்
சின்ன வெங்காயம்_5
தக்காளி_பாதி
பூண்டு_2 பற்கள்
புளி_சிறு கோலி அளவு
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
தாளிக்க:
நல்லெண்ணெய்_ ஒரு டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
துவரம் பருப்பை நன்றாக மலர வேக வை.கீரையைத் தண்ணீரில் அலசி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வை.
வெங்காயம்,தக்காளி,பூண்டு இவற்றைப் பொடியாக நறுக்கி வை.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றி சூடேற்றி தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளிக்கவும்.அடுத்து வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கு.அதனுடன் மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள்,உப்பு சேர்த்து வதக்கி பருப்பைக் கடைந்து ஊற்றி மூடி வேக வை.ஒரு கொதி வந்ததும் கீரை சேர்த்து கலக்கிவிட்டு சிறிது புளித்தண்ணீர் சேர்த்து மீண்டும் ஒரு கொதி வந்ததும் கொத்துமல்லி,தேங்காய்ப் பூ சேர்த்து இறக்கு.நீண்ட நேரம் கொதிக்க வேண்டாம்.
இந்த முறையில் எல்லாக் கீரைகளிலும் செய்யலாம்.
முருங்கைக் கீரையானால் புளி சேர்க்க வேண்டாம்.
2:42 முப இல் மார்ச் 13, 2013
bok choy endral enna keerai mam,
10:07 பிப இல் மார்ச் 13, 2013
Pushpavani,
It’s a kind of Chinese cabbage.I dont know what it is in tamil.thank you for visiting my blog.