தேவையானப் பொருள்கள்:
உருளைக் கிழங்கு_4
பூண்டு_3 பற்கள்
மிளகாய்த் தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன்
சீரகம்
பெருஞ்சீரகம்
உளுந்து
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
இந்த சிறுசிறு உருளைக் கிழங்குகளை (yukon gold) farmers market லிருந்து வாங்கும்போது புதிதாக,ஈர மண்ணுடன் இருந்தது.மற்ற உருளையை விட இதற்கு கொஞ்சம் அதிகமானத் தண்ணீரும்,வேக கொஞ்சம் கூடுதலான நேரமும் ஆனது.ஆனால் நல்ல சுவையாக இருந்தது.
உருளைக் கிழங்கை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கித் தண்ணீரில் போடவும்.பூண்டை உரித்து நறுக்கியோ அல்லது தட்டியோ வைக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு முதலில் பூண்டு சேர்த்து வதக்கவும்.
அடுத்து உருளைக் கிழங்கு சேர்த்து வதக்கி கிழங்கு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி வேக வைக்கவும்.
பாதி வெந்த நிலையில் மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து பிரட்டி விட்டு மீண்டும் மூடி வேக வைக்கவும்.நன்றாக வெந்து தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.
குறிப்பு:
இதனுடன் வெங்காயம்,தக்காளி சேர்த்தும் செய்யலாம்.தாளித்தவுடன் வெங்காயம்,பூண்டு வதக்கி பிறகு தக்காளி சேர்த்து வதக்கி அடுத்து உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி அடுத்ததெல்லாம் மேலே கூறியுள்ளபடி செய்தால் போதும்.காரம் கொஞ்சம் கூடுதலாகத் தேவைப்படுமாதலால் மிளகாய்த் தூள் மட்டும் கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
9:53 பிப இல் மார்ச் 15, 2012
orumayil sollamal mariyathayaga sollavum. vathaku, naruku, sei, pannu endru kooruvadhu nandraga illai tholiye.
7:40 முப இல் மார்ச் 16, 2012
தோழியே,
என் பெண்ணுக்காக எழுதி வைக்கிறேன்.அவளிடம் பேசுவது போலவே எழுதியும்விடுகிறேன்.இனி அப்படி வராமல் பார்த்துக்கொள்கிறேன். தெரியப்படுத்தியதற்கு நன்றிங்க.
1:30 முப இல் திசெம்பர் 22, 2016
Very super yenakku migavum pidithirukkirathu ithu varai ithu pola taste sapittathu illai