தேவையானப் பொருள்கள்:
சேப்பங்கிழங்கு_3
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
மஞ்சள்தூள்_சிறிது
மிளகாய்த்தூள்_ஒன்றரை டீஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சேப்பங்கிழங்கை எடுத்துக்கொண்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு குழையாமல் வேக வைத்து,ஆறியதும் தோலை உரித்துவிட்டு விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி மிதமானத் தீயில் சூடாக்கி முதலில் பெருங்காயதையும் அடுத்தடுத்து மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் இவற்றைப் போட்டு (கருகாமல்) லேசாக சிவந்ததும் சேப்பங்கிழங்கைப் போட்டுக் கிளறிவிடவும்.
சிறிது உப்பும் சேர்த்துக் கிளறிவிட்டு மூடி வேக வைக்கவும்.தண்ணீர் விட வேண்டாம்.விட்டால் கிழங்கு குழைந்து போய் எல்லாத் துண்டுகளும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளும்.வேண்டுமானால் கூடுதலாகக் கொஞ்சம் எண்ணெய் விடலாம்.
மசாலா,கிழங்கு எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து வெந்து,வாசனை வரும் வரை அடுப்பிலேயே இருக்கட்டும்.அதுவரை இடையிடையே கிளறிவிடவும்.
இப்போது சுவையான சேப்பங்கிழங்கு வறுவல் தயார்.
இது எல்லா வகையான சாதத்திற்கும் நல்ல பொருத்தமாக இருக்கும்.
மறுமொழி இடுக