தேவையானப் பொருள்கள்:
கெட்டி அவல்_ஒரு கப்
சர்க்கரை_ஒரு கப்
முந்திரி_10
திராட்சை_10
ஏலக்காய்_2
குங்குமப்பூ_சிறிது
நெய்_3 டீஸ்பூன்
செய்முறை:
வெறும் வாணலியில் அவலைப்போட்டு சிவக்க,வாசம் வரும்வரையில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டு pulse ல் வைத்து இரண்டு சுற்று சுற்றி கொரகொரப்பான ரவை பதத்திற்கு இடித்துக்கொள்ளவும்.
ஏலக்காயைப் பொடித்துக்கொள்ளவும்.
மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து பாதி நெய்யை விட்டு முதலில் முந்திரியையும்,பிறகு திராட்சையையும் வறுத்து ஒரு கிண்ணத்தில் வைக்கவும்.
அதே வாணலியில் ஒன்றுக்கு இரண்டு பங்கு என தண்ணீர் விட்டு, குங்குமப்பூவையும் போட்டு சூடுபடுத்தவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அவல் ரவையை சிறிதுசிறிதாகக் கொட்டிகொண்டே ஒரு தோசைத்திருப்பியால் கட்டித் தட்டாமல் நன்றாகக் கிண்டவும்.
அவல் முழுவதையும் கொட்டிய பிறகு அது வேகும்வரை விடாமல் கிளறிவிடவும்.
அவல் வெந்ததும் சர்க்க்ரையைச் சேர்த்துக் கிளறவும்.இப்போது நீர்த்துக்கொள்ளும்.
அவ்வப்போது சிறிது சிறிதாக நெய்யையும் சேர்த்துக் கொண்டு கிளறிகொண்டே இருக்கவும்.
கேசரி கெட்டிப்பதம் வந்ததும் முந்திரி,திராட்சை,ஏலப்பொடி,மீதமுள்ள நெய் இவற்றை சேர்த்துக் கிளறி,இறக்கி ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் விருப்பமான வடிவத்தில் துண்டுகள் போடவும்.
அல்லது துண்டுகள் போடாமல் அப்படியேகூட சாப்பிடலாம்.
இப்போது சுவையான அவல் கேசரி தயார்.
குறிப்பு:
நான் இதில் food color சேர்க்கவில்லை. சேர்க்க விருப்பமானால் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
மறுமொழி இடுக