தேவையானப் பொருள்கள்:
முள்ளங்கி_1
சின்ன வெங்காயம்_2
மிளகாய்த்தூள்_1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
தேங்காய்ப்பூ_ஒரு டீஸ்பூன்
வேக வைத்து பிழிந்த துவரம் பருப்பு_1/2 கைப்பிடி
கொத்துமல்லி இலை_ஒருகொத்து
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப்பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
முள்ளங்கியைக் கழுவிவிட்டு விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை அடுத்தடுத்து தாளித்துவிட்டு முதலில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
அடுத்து முள்ளங்கி சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேக வைக்கவும்.
முள்ளங்கி சீக்கிரமே வெந்துவிடும்.தண்ணீர் வற்றிக் காய் வெந்ததும் துவரம் பருப்பு சேர்த்துக் கிளறி விடவும்.
அடுத்து தேங்காய்ப்பூ,கொத்துமல்லி இலை சேர்த்துக் கிளறிவிட்டு இறக்கவும்.
இது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.
மறுமொழி இடுக