கீரையில் பருப்பு சேர்த்து செய்வது போல சில கீரைகளில் புளி சேர்த்தும் செய்வார்கள்.
முருங்கைக்கீரை, spinach போன்ற ஒருசில கீரைகள் தவிர மற்ற கீரைகளில் புளி சேர்த்து செய்யலாம்.சுவையாகவும் இருக்கும்.
தேவையானப் பொருள்கள்:
கீரை_ஒரு கட்டு
புளி_பெரிய கோலி அளவு
பச்சை மிளகாய்_2
பூண்டு_5 பல்
உப்பு_தேவைக்கேற்ப
தாளிக்க:
நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
பூண்டு_5 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
செய்முறை:
கீரையின் தண்டுப்பகுதி இல்லாமல் கீரையை மட்டும் ஆய்ந்து,சுத்தம் செய்து நீரில் அலசி எடுத்து தண்ணீரை வடிய வைக்கவும்.
ஒரு சட்டியில் ஒரு 1/2 டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதில் பச்சை மிளகாய்,பூண்டு சேர்த்து அடுப்பில் ஏற்றி சூடுபடுத்தவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் கீரை,புளி சேர்த்து வேக வைக்கவும்.
கீரை நன்றாக வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,இறுதியில் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி கீரையில் கொட்டவும்.
இவை எல்லாம் நன்றாக ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு pulse ல் வைத்து இரண்டு சுற்று சுற்றினால் மசிந்துவிடும்.
மிகவும் நைசாக இல்லாமல் சிறிது கரகரப்பாக இருக்கும்போது வழித்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
இது சாதத்தில் பிசைந்து ,வற்றலுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
மறுமொழி இடுக