தேவையானப் பொருள்கள்:
ஓட்ஸ்_ 2 கப்
பச்சைப்பட்டாணி_ஒரு கைப்பிடி
கேரட்_1/4 பாகம்
சின்ன வெங்காயம்_5 லிருந்து 10 வரை
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_2 பற்கள்
பச்சை மிளகாய்_2
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்
தாளிக்க:
நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
கடலைப் பருப்பு
சீரகம்
முந்திரி
பெருங்காயம்
கிராம்பு_1
பிரிஞ்சி இலை_1
கறிவேப்பிலை
செய்முறை:
பச்சைபட்டாணியை முதல் நாள் இரவே ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
கேரட்டை சிறுசிறு நீளத்துண்டுகளாகவும்,வெங்காயத்தைப் பொடியாக நறுக்கியும், மிளகாயை நீளவாக்கில் கீறியும் வைக்கவும்.
இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.
வெறும் வாணலியில் ஓட்ஸைக் கொட்டி சூடு வர வறுத்து தனியாக வைக்கவும்.
அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு முதலில் வெங்காயம் வதக்கவும்.
அடுத்து இஞ்சி,பூண்டு வதக்கிவிட்டு பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடுத்து கேரட்,பட்டாணி சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கியதும் ஒன்றுக்கு இரண்டேகால் பங்கு என தண்ணீர் விட்டு,உப்பு,மஞ்சள் தூள் போட்டு கொதி வரும் வரை மூடி வைக்கவும்.
கொதி வந்ததும் ஓட்ஸைப் போட்டுக் கட்டி தட்டாமல் கிளறவும்.ஓட்ஸ் வெந்து வரும்வரை மிதமானத் தீயில் மூடி வேக வைக்கவும்.
நன்றாக வெந்ததும் எலுமிச்சை சாறு விட்டுக் கிளறி,கொத்துமல்லி தூவி இறக்கவும்.
இதற்கு தேங்காய் சட்னி,குருமா பொருத்தமாக இருக்கும்.
3:20 முப இல் ஜூலை 2, 2011
கிச்சடி நன்றாக இருக்கும்மா. இஷ்டப்பட்டால் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தாலும் வாஸனையாக இருக்கும் இல்லையா.
3:22 முப இல் ஜூலை 2, 2011
கிச்சடிக்கு ஒருஸ்பூன் நெய்யும் விடு. வாஸனையாக இருக்கும்.
9:21 பிப இல் ஜூலை 4, 2011
காமாட்சி அம்மா,
பொங்கலுக்கு மட்டுமே நெய் விடுவேன்.அடுத்த முறை நீங்கள் சொல்லியது போலவே நெய் விட்டு செய்கிறேன்.நெய் விட்டால் நல்ல வாசனையாக உடனே சாப்பிடத்தான் தோன்றும்.நன்றி அம்மா.