தேவையானப் பொருள்கள்:
விருப்பமான பாஸ்தா_2 கப்
சின்னவெங்காயம்_3
தக்காளி_1
இஞ்சி_சிறிது
பூண்டு_1
மிளகாய்த்தூள்_1/4 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
ஆலிவ் ஆயில்_2 டிஸ்பூன்
கிராம்பு_1
பிரிஞ்சி இலை_1
சீரகம்
செய்முறை:
வெங்காயத்தில் இரண்டு,இஞ்சி,பூண்டு,தக்காளி இவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும்.
மற்றொரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.வதங்கும்போதே மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
சிறிது தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.இஞ்சி,பூண்டின் பச்சை வாசனை போகட்டும்.
நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை நிறுத்திவிட்டு வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்துக் கிளறி விடவும்.
பாஸ்தா வேக வைக்கும் முறை இங்கே உள்ளது.
தேவையானால் கொத்துமல்லி இலை சேர்த்து இறக்கலாம்.
மறுமொழி இடுக