தேவையானவை:
கடலை மாவு_2 கப்
அரிசி மாவு_ஒரு கப்
ஓமம்_சிறிது
தனி மிளகாய்த்தூள்_1/2 டீஸ்பூன்(விருப்பமானால்)
பெருங்காயம்_கொஞ்சம்
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_தேவைக்கு
செய்முறை:
கடலை மாவு,அரிசி மாவு,மிளகாய்த்தூள்,உப்பு இவற்றை சல்லடையில் போட்டு ஒருமுறை சலித்தெடுக்கவும்.
இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பெருங்காயம்,ஓமம் இவற்றைப் போட்டு சிறிதுசிறிதாகத் தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்தில் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.
வாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி சூடுபடுத்தவும்.
எண்ணெய் காய்ந்ததும் முறுக்கு அச்சில் ஓமப்பொடி வில்லையைப்போட்டு அதில் கொள்ளுமளவிற்கு மாவைப் போட்டு நேராகவே வாணலில் பிழிந்துவிடவும்.
பிழிந்த சிறிது நேரத்திலே வெந்துவிடும்.உடனே மறுபக்கம் திருப்பிவிட்டு எடுத்துவுடவும்.கொஞ்சம் கவனம் தேவை.இல்லையென்றால் ரொம்பவே சிவந்துவிடும்.
ஆறியதும் கண்ணாடி டப்பாவில் அல்லது பிளாஸ்டிக் கவரில் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
அல்லது லேஸாக நொறுக்கிவிட்டு கொஞ்சம் கறுவேப்பிலையை எண்ணெயில் பொரித்துப் போட்டுக் கலந்தால் ஓமப்பொடி மிக்ஸர் ரெடி.
இது சிறுபிள்ளைகள் (பெரியவர்களும்தான்)விரும்பி சாப்பிட ஏதுவாக மிகவும் சாஃப்டாக இருக்கும்.
குறிப்பு:
ஓமப்பொடி வில்லையின் துளைகள் பெரிதாக இருந்தால் ஓமத்தைக் கழுவி அப்படியே சேர்த்துக்கொள்ளலாம்.அல்லது துளைகள் சிறிதாக இருந்தால் ஓமத்தை மைய அரைத்துச் சேர்க்கலாம்.அல்லது அரைத்த விழுதை தண்ணீர் விட்டுக்கரைத்து வடிகட்டி அந்தத்தண்ணீரை மட்டும் சேர்த்துக்கொள்ளலாம்.
பெருங்காயத் தூளாக இருந்தால் அப்படியேயும்,கட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் விட்டு கரைத்தும்சேர்க்கலாம்.
மற்ற ஓமப்பொடி அச்சுகளைவிட மரத்தாலான அச்சு பிழிவதற்கு ஏற்றதாக இருக்கும்.
10:28 பிப இல் திசெம்பர் 6, 2011
ஓமப் பொடியும் சூப்பரா இருக்கு. நிறைய செய்துவை. வரவங்களுக்கும் கொடுக்க ஸவுகரியமாக இருக்கும். வீட்டிலியா செஜெங்கோ என்றும் கேட்ப்பார்கள்
1:04 பிப இல் திசெம்பர் 8, 2011
காமாட்சி அம்மா,
கண்டிப்பாக நிறைய செய்துவைக்கிறேன்.கடையில் வாங்குவது பிடிக்காமல்தான் வீட்டிலேயே செய்ய ஆரம்பித்தேன்.நன்றி அம்மா.
அன்புடன் சித்ரா.