தேவையானப் பொருள்கள்:
உருளைக்கிழங்கு_1
பெரும்பயறு_ஒரு கைப்பிடி
புரோக்கலி_1
பூண்டுப் பல்_2
சின்ன வெங்காயம்_3
மஞ்சள்தூள்_சிறிது
மிளகாய்த்தூள்_ஒன்றரை டீஸ்பூன்
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன் (தேங்காய் இல்லாததால் சேர்க்கவில்லை)
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
கருவேப்பிலை
செய்முறை:
பெரும்பயறை அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து குழையாமல் வேக வைத்துக்கொள்ளவும்.
வெங்காயம்,பூண்டு நறுக்கி வைக்கவும்.
உருளை,புரோக்கலி இவற்றை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும்.சிறு துண்டுகளாக இருந்தால் பயறுடன் பார்க்கும்போது ஒரே அளவாக இருக்கும்.
ஒரு பேனில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து விட்டு பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அது வதங்கியதும் உருளைக்கிழங்கு,வெந்த பயறு சேர்த்து வதக்கவும்.
கூடவே மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கி கொஞ்சம் தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.
இவை ஒன்றாகக் கலந்து வெந்ததும் புரோக்கலியைச் சேர்த்துக் கிளறி விட்டு மீண்டும் மூடி மிதமான தீயில் வேக விடவும்.
புரோக்கலி சீக்கிரமே வெந்துவிடும்.வெந்ததும் தேங்காய்ப் பூ,கொத்துமல்லி இலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இது சாதம்,சப்பாத்தி இவற்றிற்குப் பொருத்தமாக இருக்கும்.
1:37 முப இல் திசெம்பர் 21, 2011
சின்ன வெங்காயம் வதக்கி செய்தால் வாஸனை ஊரையே தூக்கும். பெரும் பயறும் செர்ந்து ருசியை அதிகமாக்கும். ஸத்துள்ள குறிப்பம்மா. ஸந்தோஷம்.
8:36 முப இல் திசெம்பர் 21, 2011
காமாட்சி அம்மா,
நீங்கள் சொன்ன மாதிரியேதான்.சின்ன வெங்காயத்தில் செய்தால்தான் மணமும் சுவையும் கூடுதலாக உள்ளது.உங்கள் கருத்தைப் பார்த்ததும் சந்தோஷம்.நன்றி அம்மா.
அன்புடன் சித்ரா.
2:20 பிப இல் திசெம்பர் 22, 2011
பெரும்பயறு= black eyed peas?? புது காம்பினேஷனா இருக்குங்க. நான் சின்னவெங்காயம் வாங்கிப் பலநாளாகுது! 😉
7:30 முப இல் திசெம்பர் 24, 2011
ஆமாமாம். black eyed peas ஐத்தான் பெரும்பயறு என்று சொல்வோம்.உருளைக்கிழங்கு என்றால் வீட்டில் உள்ளவர்களுக்கு இஷ்டம்.அதனால் எதையாவது அதனுடன் சேர்த்துவிடுவது.
‘நான் சின்னவெங்காயம் வாங்கிப் பலநாளாகுது!’எதனால்? கிடைப்பதில் பிரச்சினையா?
நன்றி மகி.
12:03 பிப இல் திசெம்பர் 24, 2011
/எதனால்? கிடைப்பதில் பிரச்சினையா?/அதெல்லாம் இல்லைங்க..200கிராம் $3 விற்குது..அதனால்தான்! அந்த விலைக்கு 6பவுண்டு யெல்லோ ஆனியன் கிடைக்குது..சி.வெங்காயம் இல்லாமலே சாப்புட்டு பழகிட்டோம்..எப்பவாவது ஆசைக்கு வாங்குவேன்! 🙂 🙂
8:08 முப இல் திசெம்பர் 26, 2011
மகி,
நினைத்தேன்.விலையைத்தான் சொல்லுவீங்கன்னு.200g $3 என்பது அதிகம்தான். எங்களுக்கு ஒரு lb $ 3 க்குக் கிடைக்கும்.சில சமயங்களில் $ 4 க்குப் போகும்.இது சீஸன் போல.ஒரு lb $1.29.என்ன செய்வது!அது இல்லாமல் காய்கறி வாங்கப் பிடிக்கவில்லை. 🙂