அவல் சர்க்கரைப் பொங்கல்/Aval sakkarai pongal

இது அவசரத்திற்கு எளிதில் செய்யக்கூடியது. இதற்கு ஆகும் நேரமும் குறைவு.சுவையோ அதிகம். சத்தானதும்கூட.

இதில் நான் வறுத்த அவலை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி ஒன்றும் பாதியுமாக இடித்துப் போட்டுள்ளேன்.அவரவர் விருப்பமாக முழு அவலைப் போட்டும் செய்யலாம்.

தேவையானப் பொருள்கள்:

அவல்_ஒரு கப்
பச்சைப் பயறு_1/4 கப்
வெல்லம்_ஒரு கப்
குங்குமப்பூ_சிறிது
பால்_1/2  கப்
ஏலக்காய்_1
நெய்_1/4 கப்
முந்திரி_10
திராட்சை_10

செய்முறை:

பச்சைப் பருப்பை வெறும் வாணலில் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

அதே வாணலில் அவலைப் போட்டு சூடேறும்வரை வறுத்துக்கொள்ளவும்.

பச்சைப் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு அது வேகும் அளவிற்கு தண்ணீர் விட்டு மலர வேக வைக்கவும்.

பருப்பு வெந்ததும் அதில் ஒரு பங்கு அவலுக்கு இரண்டு பங்கு பாலும், தண்ணீருமாகக்  கலந்து ஊற்றி கொதிக்க வைக்கவும்.

கொதி வந்ததும் அவலைக்கொட்டிக் கட்டித்தட்டாமல் நன்றாகக் கிளறி மிகவும் குறைவானத் தீயில் மூடி வேகவைக்கவும்.அவல் சீக்கிரமே வெந்துவிடும்.

சிறிது சூடான பாலில் குங்குமப்பூவைப் போட்டுக் கலக்கி பொங்களில் சேர்த்துவிடவும்.

இதற்கிடையில் ஒரு அடி கனமான பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி இளம் பாகு பதம் வந்ததும் பொங்கலில் கொட்டிக் கிளறவும்.

ஏலக்காயைத் தட்டிப் போடவும்.

ஒரு வாணலில் நெய் விட்டு முந்திரி,திராட்சை இரண்டையும் பொன்னிறமாக வறுத்து இவற்றை நெய்யுடன் சேர்த்து பொங்கலில் கொட்டிக்கிளறி இறக்கவும்.

சர்க்கரைப் பொங்கலுடன் புளிசாதம், உருளைக் கிழங்கு வறுவல் சேர்த்து சாப்பிட காம்பினேஷன் சூப்பராக இருக்கும்.

6 பதில்கள் to “அவல் சர்க்கரைப் பொங்கல்/Aval sakkarai pongal”

 1. chollukireen Says:

  நான் ஒரு பாயஸத்தை எழுதிவிட்டு உன்னைப் பார்த்தால் எனக்கு முன்னடியே ஒரு
  பொங்கலை எழுதிவிட்டு என்னைப்பார் என்பது போல இருக்கிரது. அழகாகவும் யிருக்கு..
  ருசியாகவும்தான் இருக்கும். கேட்கவே வேண்டாம். காம்பினேஷனும்…ரொம்பவே டேஸ்டி.

  • chitrasundar5 Says:

   காமாட்சி அம்மா,

   ஆமாம்.அவல் பாயஸம் போட்டிருக்கீங்க!அவலில் எது செய்தாலும் நன்றாகத்தான் இருக்கிறது.

   சாத வகைகள் செய்தால் ஸிம்பிளாக ஏதாவது ஸ்வீட் செய்வேன்.இன்றும் அப்படித்தான், கொண்டைக்கடலை புலாவுடன் அவல் பாயஸம் செய்தேன். ஃபோட்டோ எடுத்து, எழுதி முடித்து, ப்ளாக்கிற்கு வந்தால் உங்கள் கமென்ட் இருக்கிறது.கருத்திற்கு நன்றி அம்மா.
   அன்புடன் சித்ரா.

 2. Mahi Says:

  Yummy pongal!
  Puli sadham-potato fry is a know combo, but it’s new to know that sakkaraip pongal will also join in the combo! 🙂

 3. Mahi Says:

  Aah..this spell check in the iPad always ruin my comments! 😉

 4. Mahi Says:

  புளிசாதம்-உருளைக்கிழங்கு தெரிந்த காம்பினேஷன்,அதனுடன் சர்க்கரைப் பொங்கல் புதுசா இருக்குங்க. இதைத்தான் சொல்லவந்தேன்..ஏதேதோ டைப் ஆகிட்டது. 😉

  பொங்கல் சூப்பர்..க்விக் அன்ட் ஈசி ரெசிப்பி!

  • chitrasundar5 Says:

   மகி,

   இந்த காம்பினேஷன் நன்றாகவே இருக்கும்.செய்து,சாப்பிட்டுப் பாருங்க.

   அவலில் எது செய்தாலும் வேலை சீக்கிரமே முடிவதால் சமயங்களில் அதைப் பயன்படுத்துவதுண்டு.நன்றி மகி.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: