தேவையானவை:
கடலை மாவு_ஒரு கப்
அரிசிமாவு_2 டீஸ்பூன்
சமையல் சோடா_துளிக்கும் குறைவாக
தனி மிளகாய்த்தூள்_1/4 டீஸ்பூன்
வேர்க்கடலை_1/2 கைப்பிடி
முந்திரி_5
பெருங்காயம்_சிறிது
பூண்டுப்பல்_நான்கைந்து
கறிவெப்பிலை_கொஞ்சம்
உப்பு_தேவைக்கு
செய்முறை:
கடலைமாவு,அரிசிமாவு,சோடா உப்பு,உப்பு இவற்றை சல்லடையில் போட்டு இரண்டு தரம் சலித்து ஒரு கிண்ணத்தில் கொட்டிவைக்கவும்.
இதில் கொஞ்சம்கொஞ்சமாக தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தைவிட கொஞ்சம் நீர்க்க,கட்டிகளில்லாமல் கரைத்து வைக்கவும்.Whisk ஐப் பயன்படுத்தினால் நன்றாக வரும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பூந்தி கரண்டியைப் பயன்படுத்தி பூந்திகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.கரண்டி இல்லையெனில் சாதம் வடிக்கும் தட்டைக்கூடப் பயன்படுத்தலாம்.லட்டு பூந்தியைவிடக் கொஞ்சம் முறுகலாக எடுக்க வேண்டும்.
இவ்வாறே எல்லா பூந்திகளையும் போட்டு எடுத்தபிறகு அந்த எண்ணெயிலேயே கறிவேப்பிலை,பூண்டு (ஒன்றும் பாதியுமாக தட்டியது),வேர்க்கடலை,முந்திரி இவற்றைப் போட்டுப் பொரித்து பூந்தியில் கொட்டவும்.கொஞ்சம் கவனம் தேவை.சமயங்களில் கடலை வெடிக்கவோ அல்லது வெடித்து எண்ணெய் தெரித்து விழவோ வாய்ப்புண்டு.
இவற்றின் மீது மிளகாய்த்தூளைத் தூவி கலக்கவும்.இப்போது கரகர மொறுமொறு காராபூந்தி ரெடி.
இது எல்லா வகையான சாதத்திற்கும்,முக்கியமாக பொரியுடன் கலந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
3:23 முப இல் ஜனவரி 29, 2012
கலரா, குண்டு குண்டா காராபூந்தி டேஸ்டா இருக்கு. பிஸிபேளேபாத்துக்கு ஜோடியா இதுவும் எழுதிட்டே. சூப்பர்தான். பொரியுடன் சேர்த்து சாப்ட்டிருக்கீங்களா?முன்பு கேட்டிருந்தாய்.. பொரிதான்
என் முக்கிய டிபனே. மோர்சாதம், நாரத்தங்காய் ஊறுகாய், வெந்த காய்கறிகள், இதுதான் என் சாப்பாட்டு அயிட்டங்கள். எல்லாவற்றின் ருசியும் நன்றாகத் தெறியும். பொரியுடன் பூந்தி நல்ல மேட்ச். போதுமா சித்ரா என் சுய புராணம்.
9:44 முப இல் ஜனவரி 30, 2012
காமாட்சி அம்மா,
தி.மலையிலிருந்தபோது கோயில் வாசலில் பொரியை வாங்கி பக்கத்தில் பொட்லக்கடையில் (அப்போது அப்படித்தான் சொல்வோம்)பூந்தியை வாங்கி கலந்து சாப்பிடுவோம்.அப்படி ஏற்பட்ட பழக்கம்தான்.
உங்கள் சாப்பாட்டு அயிட்டங்கள் எல்லாம் எளிமையா இருக்கு.
அன்புடன் சித்ரா.
9:09 பிப இல் ஜனவரி 30, 2012
சூப்பரா இருக்கு காராபூந்தி! நாங்களும் பொரி+மிக்ஸர் கலந்து சாப்பிடுவதுண்டு. ப்ரெஷ் பூந்தி எப்பவுமே டேஸ்ட்தான்,அதுவும் ஹோம் மேட்!! ஆஹா!! 😛 😛
9:15 முப இல் பிப்ரவரி 1, 2012
மகி,
நீங்க பொரி+மிக்ஸர் கலந்து ஏற்கனவே சாப்டாச்சா!இங்கு பொரி நல்ல சுத்தமாகவும்,சுவையாகவும் இருப்பதால் அடிக்கடி வாங்குவதுண்டு.இரண்டும் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்போது சூப்பர் டேஸ்ட்தான்.நன்றி மகி.