கம்பை ஊறவைத்து இடித்துத்தான் இதனை செய்வார்கள்.கம்புமாவு கிடைப்பதால் அதையே பயன்படுத்திக்கொண்டேன். கேழ்வரகு மாவு & கம்பு மாவு இரண்டையும் கலந்து செய்யும்போது நன்றாக இருக்கும்.அல்லது இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டும்கூட பயன்படுத்திக்கொள்ளலாம்.
கேழ்வரகு மாவை புளிக்க வைத்துச் செய்யும்போது சுவை கூடுதலாக இருக்கும்.அல்லது இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து உடனடியாகவும் தயாரித்துக்கொள்ளலாம்.
தேவையானவை:
கேழ்வரகு மாவு_1/2 கப்
கம்பு மாவு_1/2 கப்
உப்பு_தேவைக்கு
செய்முறை:
முதல் நாளிரவே கேழ்வரகு மாவில் தண்ணீர் விட்டு கட்டிகளில்லாமல் தோசை மாவு பதத்தைவிட கொஞ்சம் நீர்க்க கரைத்து,புளிக்க வைக்கவும். காலையில் பார்த்தால் மாவு புளித்து,பொங்கினாற்போல் இருக்க வேண்டும். இட்லி மாவை புளிக்க வைப்பதுபோல் செய்ய வேண்டும்.உப்பு போட வேண்டாம்.
காலையில் ஒரு பாத்திரத்தில் நான்கைந்து கப்புகள் தண்ணீர் விட்டு சூடேற்றவும்.
அது கொதி வருவதற்குள் கம்பு மாவில் தண்ணீர் விட்டு நீர்க்க கரைத்து வைக்கவும்.
தண்ணீர் கொதி வந்ததும் கம்பு மாவை ஊற்றிக் கட்டிகளில்லாமல் கிண்டிவிடவும்.Whisk ஐப் பயன்படுத்தினால் கட்டிகளாவது ஒன்றாவது. அடியில் பிடிக்காமலும்,கட்டி விழாமலும் தடுக்க அடிக்கடி கிண்டிவிட வேண்டும்.
சிறிது நேரத்தில் கம்புமாவு பொங்கி வரும்.அப்போது கேழ்வரகு மாவைக் கரைத்து ஊற்றவும்.தேவையான உப்பு சேர்த்துக்கொள்ளவும்.மீண்டும் கட்டிகள் வராதவாறு விடாமல் கிண்டவேண்டும்.
ஒரு 5 நிமி கழித்து தீயை மிதமாக்கி மூடி மேலும் ஒரு 5 நிமி வைக்கவும். இப்போது இரண்டு மாவும் கலந்து கொதித்தபிறகு நல்ல வாசனை வரும். கெட்டியாகவும் இருக்கும்.
விருப்பப்படி சூடாகவோ அல்லது ஆறியபிறகோ சாப்பிடலாம்.ஒன்று செய்யலாம்.குளிர் காலத்தில் சூடாகவும் கோடையில் ஆற வைத்தும் சாப்பிடலாம்.
இதனை சாதம்போல் வைத்து எந்தக் குழம்புடனும் சாப்பிடலாம்.அல்லது சிறிது தண்ணீர் அல்லது மோர் சேர்த்துக் கரைத்து துவையல் வகைகள், ஊறுகாய் வகைகளுடன் சாப்பிட சுவையாக இருக்கும். நல்ல சத்தானதும்கூட.
7:23 பிப இல் பிப்ரவரி 1, 2012
நல்லா இருக்குங்க..ராகிக்கூழ் தனியா, கம்மஞ்சோறு தனியாய்தான் எங்க வீடுகளில் செய்வோம். கோடையில் கம்மஞ்சோறு அடிக்கடி செய்வது வழக்கம். இங்கே மாவுதான் கிடைக்கிறது.
“ராகிக் களி” னு சொல்லுவாஙக்ளே அந்த கன்ஸிஸ்டன்ஸி வருமோ,கடைசிலே? 🙂
7:46 முப இல் பிப்ரவரி 3, 2012
எங்க ஊர்ப் பக்கம் பொதுவாக கூழ் என்றாலே கம்பு,கேழ்வரகு இரண்டும் சேர்த்துதான் செய்வாங்க.ராகி களி கெட்டியாக இருக்கும்.கூழ் கொஞ்சம் கெட்டியாக ஆனால் தளதளனு இருக்கும்.
கடையில் கம்பு கிடைக்குமே.நான் ஒருமுறை பொரிமாவு செய்யலாம் என கம்பு வாங்கி வறுத்துப் பொடித்துப்பார்த்தேன்.பொடியவே இல்லை.என்னிடம் அப்போது நம்மூர் மிக்ஸி இல்லை.இந்த வாரம் வாங்கி மீண்டும் முயற்சிக்கப் போகிறேன்.நன்றி மகி.
10:34 முப இல் பிப்ரவரி 2, 2012
சென்னை போய் நான் எழுத நினைத்ததை நீ எழுதிவிட்டாய். கூழும், முருங்கைக்கீரையும் எங்கள் ஊர் ஸ்பெஷல். வளவனூரும், பண்ணுருட்டியும் பக்கம் பக்கம் தானே? கூழ் நன்றாக இருக்கு.
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்ற வசனம் ஞாபகம் வருகிறது. ராகிமாவை, அரிசிசேர்த்து
கொதிக்கும் ஜலத்தில் அப்படியே கொட்டிக் கிளறி கெட்டியாக வேக வைத்து எடுப்பார்கள். இது மொத்தே, கூட சாப்பிடுவது ஹுளி. இது கர்நாடகாவின் எளிய, முக்கிய உணவு.. அம்மா கொஞ்சம் கதை சொல்றேன். இல்லையா?
8:00 முப இல் பிப்ரவரி 3, 2012
காமாட்சி அம்மா,
அப்படின்னா சென்னை போகப்போறீங்க.உங்க வீட்டு கூழ் எப்படி இருக்குன்னு நாங்க பாக்க வேணாமா?இந்த பழமொழியைக் கேட்டு எத்தனை வருடங்களாகிறது.நீங்க எவ்வளவு கதை வேண்டுமானாலும் சொல்லுங்க. எல்லாம் உங்க அனுபவம்தான். எனக்கொன்றும் பிரச்சினையில்லை.
கம்பு கூட இடித்து மாவாக இல்லாமல் நொய் மாதிரிதான் சேப்பாங்க. அப்போதெல்லாம் நான் இதைத் தொடவேமாட்டேன்.பிறகு என் மகளுக்காக செய்ய ஆரம்பித்து அப்படியே நானும் சாப்பிட ஆரம்பித்துவிட்டேன்.நன்றி அம்மா.
4:21 முப இல் மே 1, 2015
இரவே கம்புமாவை காய்ச்சிவைத்து காலை கரைத்து குடிச்கலாமா
12:29 பிப இல் மே 1, 2015
Rsrayen,
வெறும் கம்புமாவைப் பற்றித் தெரியவில்லை.
கிராமத்தில் இந்தக் கூழை இரவே செய்து மூடி வைத்து அடுத்த நாள்தான் தண்ணீர் விட்டுக் கரைத்தோ அல்லது கெட்டியாகக் குழம்புடனோ சாப்பிடுவார்கள். செய்ததும் சூடாக சாப்பிட்டால் உடல்சூடு என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். குளிர்ச்சியாக இருக்க அடுத்த நாள்தான் சாப்பிடுவார்கள்.
3:23 முப இல் ஏப்ரல் 1, 2012
super
9:01 முப இல் ஏப்ரல் 1, 2012
Thank you Priya.
2:31 முப இல் மே 2, 2015
நன்றி
1:43 பிப இல் மே 3, 2015
Rsrayen,
நீங்க ‘கம்பு மாவு’ன்னு கேட்கவும் கடையில் கிடைக்கும் மாவைப் பற்றியோ என நினைத்துவிட்டேன்.
ஆமாம், கம்பை ஊற வைத்து இடித்து தோல் நீக்கி(இப்போது தோல் இல்லாமலே கிடைக்கும்னு நினைக்கிறேன்) மீண்டும் இடித்து மாவாக்கி(மாவும் நொய்யும் சேர்ந்த மாதிரி இருக்கும்) இரவே கூழ் செய்து அடுத்த நாள் சாப்பிடுவாங்க. அல்லது செய்த உடனேகூட சாப்பிடுவாங்க. கேழ்வரகு கூழைவிட இது இன்னும் குளிர்ச்சி.
இதைத்தான் நீங்க கேக்குறீங்கன்னு நினைக்கிறேன் 🙂
4:22 முப இல் ஒக்ரோபர் 25, 2012
i really wanted to know how to make that..thanks for sharing..keep posting all you know..thanks
9:03 முப இல் ஒக்ரோபர் 27, 2012
Gnanaguru,
முதல் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி.
வயசான எங்க அம்மாவைக் கேட்டு,வாங்கிய குறிப்புகளில் இதுவும் ஒன்று. நல்ல அருமையான உணவு.மறந்துபோகாமலிருக்க பதிவு செய்து வைத்தேன். அது உங்களுக்கும் பயன்படுகிறது எனும்போது மகிழ்ச்சி.
9:33 முப இல் ஒக்ரோபர் 27, 2012
ungalukum nandri..kepai kool seithu saptachu(kambu maavu kedaikavillai)..en amma miga nandraka seithu koduthargal…saapidum munbe thayirodu china vengayam sernthiruntha koolin manam enaku sakthi alithathu..ithai kaalai unavaga nithamum sapida vendum endru romba naalaga aasai..andru thidirendu thediya poluthu ungal pathivu vanthathu…miga sirapaga pathivai alithirikirgal..thodarungal..nandri
7:05 பிப இல் ஒக்ரோபர் 28, 2012
Gnanaguru,
உங்களுக்கு கம்பு கிடைக்குமென்றால் அதை ஊறவைத்து,ரவை பதத்தில் இடித்து,அத்துடன் சிறிது நீர் விட்டு கரைத்து சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்.கம்பு கிடைக்காததால்தான் மாவு சேர்த்து செய்தேன்.
அம்மா செய்து கொடுத்தால் அது தனி சுவைதான்.தொடர் வருகைக்கு நன்றி.
3:33 முப இல் ஒக்ரோபர் 29, 2012
yes raw kambu ingu kedaikum..vanga vendum..enga veetil ipo daily breakfast keppai kool ayiduchu 🙂 en amma kambu vangi varuvathaga koori irukirargal..nandri chirtrasundar5
11:49 முப இல் நவம்பர் 7, 2012
romba nalla iruku . thanks
3:14 பிப இல் நவம்பர் 8, 2012
உமா,
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.தொடர்ந்து வாங்க.
8:07 முப இல் திசெம்பர் 13, 2012
good,healthy,tasty. thanks for this resipy.
8:49 முப இல் திசெம்பர் 15, 2012
Thank you for the compliment.
11:17 பிப இல் மே 2, 2013
Very useful tips
7:05 பிப இல் மே 29, 2013
அன்பின் சித்ரா சுந்தர் – வலைச்சரம் மூலமாக வந்தேன் – கேழ்வரகு கம்பு கூழ் – செய்முறை விளக்கம் அருமை – நன்று – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
7:24 பிப இல் மே 29, 2013
சீனா ஐயா,
வலைச்சரத்தில் அறிமுகமானதைத் தங்களின் மூலமாகத் தெரிந்துகொண்டேன்,நன்றி ஐயா.மேலும் பாராட்டுக்கும்,வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.
8:51 பிப இல் திசெம்பர் 11, 2013
கம்பு தனியாக கேழ்வரகு தனியாக கிண்டியது உண்டு! ஓ! இப்படியும் கிண்டலாமோ.. கேழ்வரகை முந்தைய நாள் இரவே ஊற வைத்து புளிக்க வைத்து பின் கிண்டினால் இன்னும் சுவையாக இருக்குமோ?? செய்து பார்த்து விட்டு சொல்கிரேன் சித்ரா அக்கா 🙂
5:55 பிப இல் திசெம்பர் 13, 2013
“கேழ்வரகை முந்தைய நாள் இரவே ஊற வைத்து”_______ மஹா, கேழ்வரகு மாவைத்தான் கரைத்து ஊற வைப்பாங்க. நல்லா புளிச்சு,நுரைத்து, பொங்கி வந்திருக்கும். லேட்டா வந்து சொல்றேனோ ! புளிக்குழம்பு, சாம்பார் இவற்றுடன் கெட்டியா வச்சும் சாப்பிடுவாங்க.
7:29 முப இல் ஜூன் 21, 2014
ராகி மாவுடன் நொய் அரிசி கலந்து செய்தால் சுவை அதிகமாக இருக்கும்
9:41 பிப இல் ஜூன் 21, 2014
பாப்ஸ்,
நீங்கள் சொல்வதுபோலவே சிலரது பதிவுகளில் பார்க்கிறேன். இதுவரை செய்ததிலை. முயற்சித்துப் பார்க்கிறேன். தங்களின் வருகைக்கும் நன்றிங்க.