அரைத்துவிட்ட சாம்பார்

மிளகாய்த்தூள் அரைக்கப் பயன்படுத்தும் அதே பொருள்களை வைத்து ஒரு நாள் சாம்பாருக்குத் தேவையானதை வறுத்துப் பொடித்து செய்கிறோம். அவ்வளவே. புதிதாக,வறுத்துப் பொடிக்கும்போது அதன் சுவையே தனிதான்.ஒரு காய் அல்லது பல காய்கள்,கிழங்குகள்,காய்ந்த பீன்ஸ் வகைகள் சேர்த்தும் செய்யலாம்.

தேவையானப் பொருள்கள்:

துவரம்பருப்பு_1/2 கப்
விருப்பமான காய்கறிகள்_தேவையான அளவு
சின்ன வெங்காயம்_10
தக்காளி_1
பூண்டிதழ்_2
புளி_கோலியளவு
உப்பு_தேவைக்கு
கொத்துமல்லி இலை

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
வெந்தயம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

வறுத்துப் பொடிக்க:

கொத்துமல்லி விதை_2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய்_2 (காரம் விரும்பினால் கூட ஒன்று சேர்த்துக்கொள்ளலாம்)
மிளகு_2
சீரகம்_1/2 டீஸ்பூன்
வெந்தயம்_சிறிது
கடலைப்பருப்பு_சிறிது
உளுந்து_சிறிது
கறிவேப்பிலை_சிறிது
தேங்காய்ப்பூ_ஒரு டீஸ்பூன்
மஞ்சள்_சிறுதுண்டு

செய்முறை:

துவரம் பருப்பில் சிறிது விளக்கெண்ணெய் விட்டு கூடவே பூண்டு,சிறிது மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வேகவைத்துக்கொள்ளவும்.

வெறும் வாணலியை அடுப்பிலேற்றி வறுத்துப் பொடிக்க‌ வேண்டியவைகளை (மஞ்சள் தவிர) தனித்தனியே எண்ணெய் இல்லாமல் வறுத்துக்கொள்ளவும்.

ஆறியதும் மிக்ஸியில் போட்டு தூளாக,நைஸாக இடித்துக்கொள்ளலாம். அல்லது தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளி,காய்கறிகள் இவற்றை விருப்பமான அளவில் நறுக்கிக்கொள்ளவும்.

புளி கரையும் அளவிற்கு தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.

குழம்பு பாத்திரத்தை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டுத் தாளிக்க வேண்டியவற்றைத் தாளிக்கவும்.

தாளிப்பு முடிந்ததும் வெங்காயம்,தக்காளி,காய்கறிகளை அடுத்தடுத்து சேர்த்து வதக்கி,பொடித்துவைத்துள்ள பொடியைச் சேர்த்துக் கிளறிவிட்டு,உப்பு சேர்த்து,பருப்பைக் கடைந்து ஊற்றி மூடி கொதிக்க வைக்கவும்.

உருளைக்கிழங்கு  போன்ற எளிதாக வேகக்கூடிய காய்களை சேர்ப்பதாக இருந்தால் சாம்பார் ஒரு கொதி வந்தபிறகு போடலாம். புரோக்கலி, கீரைவகைகள் போன்றவற்றை  சாம்பாரை இறக்குமுன் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கலாம். காய்ந்த பீன்ஸ் வகைகள் என்றால் முதல் நாளிரவே ஊறவைத்து,வேகவைத்து சேர்த்துவிடவும்.

சாம்பாரிலுள்ள காய்கள் வெந்ததும் புளித்தண்ணீரைச் சேர்த்து, கொதித்த பிறகு கொத்துமல்லை இலை சேர்த்து இறக்கவும்.

இது சாதம்,இட்லி,தோசை,பொங்கல் போன்றவற்றிற்கு மிகப் பொருத்தமாக இருக்கும்.

Advertisements

5 பதில்கள் to “அரைத்துவிட்ட சாம்பார்”

  1. Mahi Says:

    அருமையான சாம்பார்! 😛

  2. chollukireen Says:

    என் கமென்ட் எப்படி போஸ்டாகலே.தெறியலே. விதவிதமாக ஸாம்பார் எப்படியெல்லாம் செய்ய முடிகிறது.. ஸாம்பார் இன்னும் கொஞ்சம் போடுங்கோ என்று உன் ஸாம்பாரை விரும்பி கேட்பார்கள் என்று நினைக்கிறேன்.நன்றாக இருக்கு.

    • chitrasundar5 Says:

      காமாட்சிமா,

      மகிகூட ஒரு தடவ சொன்னாங்க.எதனால் அப்படி ஆகிறது!தெரியலையே.

      நீங்க இப்படி கமெண்ட் போடும்போது எனக்கு சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை.அன்றைய சாம்பாருக்கு எங்க வீட்டிலும் (வீட்டுக்காரர் & மகள்) நல்லாருக்குன்னு சொன்னாங்க.நானே எங்க வீட்டில் எத்தனை பேர் என்று மேலும் ஒரு க்ளுவைக் கொடுத்துவிட்டேன்.பேசியதில் ரொம்ப சந்தோஷம். நன்றிமா.
      அன்புடன் சித்ரா.

  3. chollukireen Says:

    அளவானகுடும்பம், வளமான வாழ்வு.ஸந்தோஷமம்மா..வரும் கமென்ட்டுகள் எல்லோருக்குமே பரிவு காட்டுவதைப்போல ஸந்தோஷமான ஸமாசாரம்தான். இது எல்லோருக்கும் பொருந்துமம்மா.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: