பாகு கொஞ்சமாக செய்வதால் பாகு காய்ச்சும் பாத்திரம் அகலமாயிருப்பதைவிட கொஞ்சம் சிறியதாக இருந்தால் நல்லது.
வெல்லம் அதன் நிறத்தில் இல்லாமல் வெள்ளையாக இருந்ததால் அந்த அழகான லைட் ப்ரௌன் கலரில் உருண்டைகள் வரவில்லை.எனினும் சுவையில் மாற்றமில்லை.
தேவையானவை:
பொரி_4 கப்
வெல்லம்_1/2 கப்
ஏலக்காய்_1
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் பொரியை எடுத்து வைக்கவும்.கிண்ணம் பாகு ஊற்றிக் கிளற வசதியாக இருக்க வேண்டும்.ஏலக்காயையும் பொடித்து பொரியில் கலந்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தப் பொடித்துப் போட்டு (கல்,மண் இல்லாமல்) அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு மிதமானத் தீயில் அடுப்பில் வைக்கவும்.
வெல்லம் முழுவதும் கரைந்து பாகு முற்றிய பதம் வந்ததும் எடுத்துப் பொரியில் ஊற்றி மத்தின் காம்பால் நன்றாகக் கிண்ட வேண்டும்.
பிறகு ஆறியதும் உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.
இப்போது மிக எளிதாக செய்யக்கூடிய ,சத்தான,இனிப்பான, மொறுமொறுப்பான பொரி உருண்டைகள் தயார்.
10:13 பிப இல் மார்ச் 6, 2012
நல்லா இருக்குங்க. எங்க ஊர்ல சந்தையில் வாரவாரம் ப்ரெஷ் பொரி கிடைக்கும், இங்கே இன்டியன்ஸ்டோரில் பேக் பண்ணப்பட்ட பொரி ஒருவித வாடை வருவதால் நான் வாங்குவதே இல்ல! 😐
11:49 முப இல் மார்ச் 8, 2012
ஆமாம்.என்ன செய்வது?நன்றாக ஓடும் கடையாகப் பார்த்து வாங்கிப்பாருங்க. வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி மகி.
11:24 பிப இல் மார்ச் 6, 2012
பொரி உருண்டை ஜம்முனு இருக்கு. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திலே எங்கே பாத்தாலும் ரோட்லே பொரிவுண்டை
வியாபாரம் அமோகமா இருக்கும். இப்போ எப்படியோ? ரொம்ப பிடிச்சிருக்கு. அன்புடன்
12:03 பிப இல் மார்ச் 8, 2012
காமாட்சி அம்மா,
மலை சுற்றும் வழி நெடுகிலும் பலவித திண்பண்டங்கள் ஜோராக விற்பனையாகும்.நானும் தீபம் சமயத்தில் போய் பத்து வருடங்களுக்கும் மேலாகிறது.இப்பொ எப்படி எனத் தெரியவில்லை.
சென்ற ஜூலை மாதம் கோயிலுக்குப் போனபோது எனக்கே ஆச்சரியம். கோவிலை அவ்வளவு சுத்தமாக வைத்திருந்தார்கள்.
நன்றி அம்மா.
7:25 முப இல் மார்ச் 7, 2012
செய்முறை மிகவும் எளிதாக இருக்கிறது.. இனி கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்து
விடலாம்… வாழ்த்துக்கள் .
12:12 பிப இல் மார்ச் 8, 2012
யாஸ்மின்,
உங்க ப்ளாக்கில் நிறைய ஸ்வீட்ஸ் செஞ்சு போட்டிருக்கீங்க.உங்களுக்கிது கண்டிப்பாக மிக எளிதாகத்தானிருக்கும்.
நீங்க கடையில வாங்குவிங்களா.எங்க ஊர்ல தெருவில் பெரியபெரிய அகலமான கூடையில் வைத்து சைக்கிளில் எடுத்து வந்து விப்பாங்க.வருகைக்கு நன்றி.
6:39 முப இல் செப்ரெம்பர் 18, 2015
நானும் பொரிஉருண்டை செய்தேன் ஆனால் உருண்டை சரியாக வராமல் பொரியும், பாகும் கையில் ஒட்டிக்கொள்கிறதே… எப்படி உருண்டை பிடிப்பது/
6:39 முப இல் செப்ரெம்பர் 18, 2015
நானும் பொரிஉருண்டை செய்தேன் ஆனால் உருண்டை சரியாக வராமல் பொரியும், பாகும் கையில் ஒட்டிக்கொள்கிறதே… எப்படி உருண்டை பிடிப்பது/
1:17 பிப இல் செப்ரெம்பர் 18, 2015
சங்கர்,
உருண்டை பிடிக்க முடியலையா 😦
பாகு நல்ல முற்றிய பதமாக இருக்க வேண்டும். நன்றாகக் கிளறவும் வேண்டும். பிடிக்க ஆரம்பிக்கும்போது வெல்லத்தின் பிசுபிசுப்பால் பொரி கையில் ஒட்டத்தான் செய்யும், இருந்தாலும் விடாமல் உருட்டிப் பிடிங்க. ஒன்று பிடிச்சிட்டா மீதி தன்னால வந்துடும்.
வருகைக்கு நன்றி !