பொதுவாக செடியில் முதலில் துளிரும் தொடர்ந்து பூ,காய்,கனி எனவும்தான் பார்த்திருப்போம்.ஆனால் இங்கு வந்தபிறகு எல்லாமே தலைகீழாக இருந்தது. முதலில் பூ,அடுத்து துளிரும்,இலையுதிர் காலத்தில் இலைகளின் நிறம் மாறி அதுவே ஒரு அழகாகவும் இருந்தது.
எங்கள் வீட்டின் எதிரிலுள்ள மரம்.ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றவாறு மாறுவதைப் படம்பிடித்து வைத்திருந்தேன். ப்ளாக் இருப்பதால் இதில் போட்டுவிட்டேன்.
வசந்தம். (கொஞ்ச நாட்களுக்கு முன் பூக்கள் பூக்க ஆரம்பித்தது.படத்தைக் கிளிக் செய்து பார்த்தால் பூக்கள் பூக்க ஆரம்பிப்பது தெரியும்.)
பூக்கள் பூத்துவிட்டன. ( தற்சமயம் )
கோடை (இன்னும் கொஞ்ச நாளில்)
இலையுதிர் காலம். ( கோடை முடிந்த பிறகு,ஒரு காற்று அடித்தால் போதும்.இலைகள் உதிரத் தயாராகவுள்ளன.)
குளிர் காலம் ( இலைகள் உதிர்ந்து,மரம் காய்ந்துவிட்டதுபோல், பார்க்கவே பரிதாபமாக)
12:24 பிப இல் மார்ச் 14, 2012
🙂
I have noticed this..also this year spring came a bit early. Nice clicks!
3:24 பிப இல் மார்ச் 15, 2012
மகி,
ஸ்பிரிங் போய் கோடையே வந்த மாதிரி இருந்தது.இந்த வாரம் கொஞ்சம் மேகம்,மழை,தூறல் என இருந்து மீண்டும் இன்று சூப்பர் வெதர்.நல்லாருக்கு.நன்றி மகி.
2:15 முப இல் மார்ச் 15, 2012
வஸந்தருது மன மோஹனமே. மரமும் பூவும் இலைகளேயில்லாமல்..கண்கொள்ளாக் காட்சிதான். மொட்டையாக மரங்கள் நிற்பதும் மாற்றாக வஸந்தமும். இயற்கையின் நன்கொடைகள். நல்ல படங்கள்.
3:39 பிப இல் மார்ச் 15, 2012
காமாஷி அம்மா,
‘மரமும் பூவும் இலைகளேயில்லாமல்’ இதுகூட பரவாயில்லமா.விண்டரில் சில மரங்கள் இலைகளே இல்லாமல்,காய்ந்து போனமாதிரியும் ஆனால் அது முழுவதும் பழங்கள் நிறைந்தும் இருக்கிறது.இப்போது பூக்கள் பூக்க ஆரம்பித்து வசந்தத்தை (March 21st) வரவேற்கத் தயாராகிவிட்டன.
உங்களின் பிஸியான நேரத்திலும் வந்துட்ரிக்கீங்க.நன்றி அம்மா.