முருங்கைக்காய்ப் பொரியல்

 

 

 

 

 

 

 

 

 

 

தேவையானவை:

முருங்கைக்காய்_2
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

முருங்கைக்காயை நன்றாகக் கழுவிவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி தளிக்க வேண்டியப் பொருள்களைத் தாளித்துவிட்டு முருங்கைக்காயைப் போட்டுக் கிளறவும்.

அதில் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து பிரட்டிவிட்டு காய் பாதி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி,மிதமானத் தீயில் வேக விடவும்.

காய் வெந்து வருவதற்குள் இடையிடையேக் கிளறி விடவும்.காய் சீக்கிரமே வெந்துவிடும்.

காய் வெந்து,மஸாலா எல்லாம் ஒன்றாகக் கலந்து, தண்ணீர் வற்றியவுடன் இறக்கவும்.

எல்லா சாத வகைகளுக்கும்,முக்கியமாக ரசம்,கிள்ளிப்போட்ட சாம்பார் போன்ற‌வற்றிற்கு நன்றாக இருக்கும்.

விருப்பமானால் தேங்காய்ப்பூ,கொத்துமல்லி இலை சேர்த்துக்கொள்ளலாம்.

 

Advertisements

6 பதில்கள் to “முருங்கைக்காய்ப் பொரியல்”

  1. yasmin Says:

    சித்ராசுந்தர்,முருங்கைக்காய்ப் பொரியல் வாசனை இங்கே வரைக்கும் வருது.பார்க்க நல்ல காரசாரம உள்ளது. வாழ்த்துக்கள் ….

    • chitrasundar5 Says:

      யாஸ்மின்,

      வாஸனை அங்குவரை வந்தாச்சா? அன்றைய காரமே இல்லாத கிள்ளிப்போட்ட சாம்பாருக்கு இந்தக் காரமான பொரியல் சூப்பரா இருந்துச்சி.வாழ்த்துக்களுக்கு நன்றிங்க‌.

  2. chollukireen Says:

    2 , 3 நாட்களாக எதையும் பார்க்க முடியாமல் பிஸி. இங்கே பெறிய
    முருங்கைக் காய்களைப் பார்க்கும்போது, கூட்டையும், கறியையும்
    நினைத்துக் கொண்டேன். நீ செய்து அனுப்பி விட்டாய், நன்றாக இருந்தது. முருங்கையைப் பிளந்து அதன் சோற்றை எடுத்துச்
    செய்வது என் வழக்கம். இது இன்னும் சுலபம். ருசிதான் தூக்கலாக
    இருக்கு.

    • chitrasundar5 Says:

      காமாட்சி அம்மா,

      நான் அனுப்பிய முரு.பொரியல் நன்றாயிருந்தது என்பதில் சந்தோஷம்.எவ்வளவு முருங்கைக்காய்களைப் பிளந்து அதன் உள்ளே உள்ளதை எடுப்பது.அப்படியே எடுத்தாலும் எவ்வளவு வரும்?இது வேலை அதிகம் வாங்குமே.முடிந்தால் என்றாவது செய்தால் உங்க ப்ளாக்கில் போடுங்க.எங்களுக்கு உதவும்.நன்றி அம்மா.

  3. Mahi Says:

    பொரியல் நல்லா இருக்குங்க..இங்கே இன்னும் நல்ல முற்றிய முருங்கைக்காய்கள் வரலை..பிஞ்சு பிஞ்சாய் கருப்பு நிறத்தில,ஒல்லியா, யானை விலையில(!) வைச்சிருக்காங்க இண்டியன் ஸ்டோர்ல! 😉

    • chitrasundar5 Says:

      மகி,

      விலைக்கு பயந்து நான் 4 முருங்கைக்காய்க்குமேல் எடுக்க மாட்டேன். சமயங்களில் அந்த கருப்புக் காயைத்தான் வாங்கவேண்டி வரும்.என்ன செய்வது!வருகைக்கு நன்றி மகி.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: