உருளைக்கிழங்கு & ப்ரோக்கலி & பச்சைப்பயறு பொரியல்

 

தேவையானவை:

உருளைக்கிழங்கு _1
ப்ரோக்கலி_1
முழு பச்சைப் பயறு_ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம்_5
பூண்டிதழ்_3
மஞ்சள்தூள்_சிறிது
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
சீரகம்
பெருஞ்சீரகம்
உளுத்தம்பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

முழு பச்சைப் பருப்பை முதல் நாளிரவே ஊறவைத்து விடவும்.அல்லது முளை கட்டிய பயறு என்றாலும் நன்றாகவே இருக்கும்.சமைக்கும்முன் ஒரு பாத்திரத்தில் போட்டு  அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து அரை பதமாக‌ வேக வைத்து நீரை வடித்து வைக்கவும்

உருளைக் கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும்

ப்ரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்து கழுவி நீரை வடிக்கவும்.வெங்காயம்,பூண்டு நறுக்கி வைக்கவும்

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து விட்டு பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும்அது வதங்கியதும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்

கூடவே மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கி லேசாக தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்

உருளை நன்றாக சிவந்து வந்ததும் வெந்த பச்சைப் பயறு,புரோக்கலியைச் சேர்த்துக் கிளறி விட்டு மீண்டும் மூடி மிதமானத் தீயில் வேக விடவும்

எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும்  இறக்கவும்.தேவையானால் சிறிது தேங்காய்ப்பூ,கொத்துமல்லி இலை சேர்க்கலாம்.செய்யும்போது இவை இரண்டும்  இல்லாததால் நான் சேர்க்கவில்லை.

இது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

Advertisements

6 பதில்கள் to “உருளைக்கிழங்கு & ப்ரோக்கலி & பச்சைப்பயறு பொரியல்”

  1. yasmin Says:

    ஆஹா!!!சூப்பர்.அற்புதமான குறிப்பு, மிகவும் சத்தான பொரியல் வாழ்த்துக்கள்….

    • chitrasundar5 Says:

      யாஸ்மின்,

      வீட்டில் சிலவற்றை (ப்ரோக்கலி போன்றவை) சாப்பிடாமலே ஒதுக்குவாங்க. அதனால் அவற்றை உருளையில் சேர்த்துவிடுவேன்.
      இது உங்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி.வருகைக்கும்,கருத்திற்கும் நன்றிங்க‌.

  2. Mahi Says:

    ஹெல்த்தி பொரியல்! கலர்ஃபுல்லா இருக்குங்க! 😛

  3. chollukireen Says:

    பொரியலின் கலவை கலர் இரண்டுமே அருமையாக வந்திருக்கு.
    ஸத்தான இந்த ப்ரகோலியை இங்கெல்லாம் ஜாஸ்தி தெரியாது என்று நினைக்கிறேன். ரொம்ப வருஷங்களுக்கு முன் காலி ப்ளவர் மாதிரி பச்சைக் கலர். இதற்கேன் இவ்வளவு விலை என்று நினைத்ததுண்டு. பெங்களூரில் இருக்கும் போது இப்படி.ஜெனிவா போனபின்தான் ப்ரக்கோலி ருசியே தெறியும். இப்படியும் ஒருமுறை செய்து ருசித்தால் போகிறது. ரவைஉப்புமா,கறிகள் என
    அனைத்திலும் இப்போது வியாபித்து ரொம்பவே ஃபேமஸ் ஆகிவிட்டது. நல்ல குறிப்புக்கு ஸந்தோஷம். அன்புடன் சொல்லுகிறேன்.

    • chitrasundar5 Says:

      காமாஷி அம்மா,

      நானுமே இங்கு வந்துதான் பார்த்தேன்.முதலில் வாங்கிவாங்கி வீணாக்குவேன். அதன்பிறகு கொஞ்சங்கொஞ்சமாக எல்லாவற்றிலும் சேர்க்க ஆரம்பித்தேன்.

      முன்பெல்லாம் எது சமைத்தாலும் கேரட்,பீன்ஸ்,பீட்ரூட்,கீரை,உருளை என எதுவாக இருந்தாலும் ஒரே கலர்தான்.அதுதான் brown color.இப்போதெல்லாம் ஓரளவுக்கு காயின் நிறம் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறேன்.கருத்தைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றிமா.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: