இடியாப்பம் 2

தேங்காய்ப்பூ & சர்க்கரை  சேர்த்த இடியாப்பம்

இடியாப்பத்துடன் தேங்காய்ப்பால்,சர்க்கரை&தேங்காய்ப்பூ,வெஜ்&நான்வெஜ் குருமா சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

அதேபோல் புது ஈரமாவில் செய்தால்தான் பளீர் வெண்மை & softness & நல்ல சுவை கிடைக்கும்.என்றைக்கோ ஒரு நாள் செய்கிறோம்,புது மாவில் செய்துவிடுவோமே.

தேவையானவை:

பச்சரிசி_2 கப்
தேங்காய்ப்பூ_சுமார் 10 டீஸ்பூன்கள்
சர்க்கரை_தேவைக்கு
உப்பு_சிறிது

அரிசியைக் குறைந்தது இரண்டு மணிநேரம் ஊறவைத்து,நீரை வடிகட்டி,மிக்ஸியில் நைஸாக இடித்து இட்லிப்பானையில் வைத்து அவித்து,பிறகு மாவை உதிர்த்துவிட்டு,சிறிது உப்பு சேர்த்து,அதில் கொஞ்சங்கொஞ்சமாக warm water சேர்த்து முறுக்கு மாவைப்போல் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவேண்டும்.

மாவு அவிக்கும்போது நன்றாக வெந்திருக்க வேண்டும்.இல்லையென்றால் மாவு இடியாப்ப அச்சில் வெளியே வராது.மாவு நன்றாக வெந்திருந்தால் அச்சில் சரசரவென வந்துவிடும்.

மாவை அவித்தும் சரியாக வேகாமல் இருந்தால் மாவில் சிறிது தண்ணீர் தெளித்து மைக்ரோ அவனில் முதலில் ஒரு 30 செகண்ட் வைத்து எடுத்து ஒருமுறை பிசைந்துவிட்டு மீண்டும் ஒரு 30 செகண்ட் வைத்து எடுத்தால் சரியாகிவிடும்.

இட்லிப் பானையை அடுப்பில் ஏற்றவும்.தண்ணீர் கொதி வருவதற்குள் இடியாப்ப அச்சில் மாவைப் போட்டு,இட்லித்தட்டில் ஈரத்துணியைப்போட்டு படத்திலுள்ளதுபோல் பிழிந்துவிடவும்.

இரண்டு இட்லித்தட்டுகள் இருந்தால் வசதியாக இருக்கும்.ஒன்று வெந்துகொண்டிருக்கும்போதே மற்றொன்றில் பிழிந்து ரெடியாக வைத்துக்கொள்ளலாம்.

தண்ணீர் கொதி வந்ததும் இடியாப்பத் தட்டை/ இட்லித்தட்டை இட்லிப் பானையில் வைத்து மூடவும்.ஏற்கனவே மாவு வெந்திருப்பதால் சீக்கிரமே வெந்துவிடும்.மூடியைத் திறந்து இடியாப்பத்தைத் தொட்டுப் பார்த்து,கைகளில் ஒட்டாமலிருந்தால் எடுத்துவிடலாம்.

எடுத்து ஒரு தட்டில் கொட்டி சூடாக இருக்கும்போதே நூல் பிரிப்பதுபோல் பிரித்து உதிர்த்துவிடவும்.துண்டுதுண்டுகளாக உடைத்துவிட வேண்டாம்.அப்படி செய்தால் உருண்டைஉருண்டையாக இருக்கும்.

இப்போது ஒன்றிரண்டு டீஸ்பூன்கள் தேங்காய்ப் பூ,சர்க்கரை சேர்த்து கலந்துவிட்டு  ஃபோர்க் ஸ்பூனால் சாப்பிடவேண்டியதுதான்.ஒவ்வொருவராக சாப்பிடுவதானால் இவ்வாறு செய்யலாம்.

அல்லது மொத்தமாக செய்வதானால் எல்லாவற்றையும் செய்து அப்போதைக்கப்போது உதிர்த்துவிட்டு,எல்லாவற்றிற்குமாக சேர்த்து தேங்காய்ப்பூ,சர்க்கரை சேர்த்து கலக்கலாம்.

இது ஈஸியா டைஜஸ்ட் ஆகக்கூடியது.முக்கியமா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க.

11 பதில்கள் to “இடியாப்பம் 2”

  1. chollukireen Says:

    சித்ரா இடியாப்பம் நிஜமாகவே திருஷ்டியா போகிறமாதிறி வெள்ளைவெளேறென்று அருமையாக இருக்கு. இந்த முறை அதாவது மாவை ஆவியில் வேகவைத்துச் செய்வது எனக்குப் புதிது.. இடித்தமாவைக் கிளறி , பெறிய கொழுக்கட்டை வடிவில்,
    உருட்டி, கொதிக்கும் தண்ணீரில்போட்டு வேகவைத்து, சுடச்சுட
    அந்தக் கொழுக்கட்டைகளை சேவையாக அதான் இடியாப்பமாக
    செய்யும் வழக்கம் இருந்தது. இதுவும் நீ எழுதிய முறையும்
    நன்றாக இருக்கு. இனிப்பும் நன்றாக சுலபமாக இருக்கிறது. இப்போது புழுங்கலரிசியை க்ரைண்டரிலரைத்துச் சேவை
    செய்கிறேன். இதுவும் சுலபமாக இருக்கு.

    • chitrasundar5 Says:

      காமாஷி அம்மா,

      எங்கம்மா இப்படித்தான் செய்வாங்க.புட்டு,கொழுக்கட்டை எல்லாம்கூட இந்த முறையில்தான்,ஈரமாவு இடித்துதான் செய்வோம்.

      நீங்க சொல்லும் முறையைப்பார்த்தால் பிழிய கஷ்டமாக இருக்கும்போல் தெரிகிறது.ஒருவேளை செய்து பழகினால் சரியாகிவிடுமோ!புழுங்கலரிசியில் செய்தால் உடலுக்கு நல்லது.ஒரு தடவயாவது செய்து பார்க்க வேண்டும்.உங்க பின்னூட்டத்தைப் பார்த்ததும் ஒரு சந்தோஷம்.நன்றி அம்மா.

  2. Mahi Says:

    இடியாப்பம் வெள்ளை வெளேர்னு சூப்பரா இருக்குங்க! கொஞ்சம் வேலைதான் அதிகமாத் தெரியுது! 😉 இப்படி யாராவது செய்து கொடுத்தா சாப்பிட வசதியா இருக்கும். ஹாஹா! 😀

    • chitrasundar5 Says:

      மகி,

      இட்லியை விடவா வேலை அதிகம்? உங்களால முடியலனா வீட்ல செய்யச்சொல்லி சாப்பிடுங்க.டயட்டையெல்லாம் ஒரு நாளைக்கு மூட்டை கட்டி வைத்துவிட்டு இடியாப்பம் செய்து அது மூழ்கும் அளவு தேங்காய்ப்பால் ஊற்றி (சர்க்கரை சேர்த்து) சாப்பிட்டுப் பாருங்க.ஆனால் ஒன்றுக்குமேல் சாப்பிடவே முடியாது.கருத்துக்கு நன்றி மகி.

  3. Mahi Says:

    /இட்லியை விடவா வேலை அதிகம்? /கட்டாயம்!! 😉 ஒருவேளை எனக்கு இது பழக்கமில்லாத வேலையாய் இருப்பதால் இருக்கலாம். இட்லி மாவு அரைச்சு பழக்கமாகிட்டது. அரிசி ஊறவைச்சு,உலர்த்தி, பொடித்து,சலித்து, வேகவைத்து,பிசைந்து,பிழிந்து,வேகவத்து… நீங்களே எண்ணிப்பாருங்க, எவ்வளவு வேலைனு!! ஹி..ஹி! 🙂

    /////உங்களால முடியலனா வீட்ல செய்யச்சொல்லி சாப்பிடுங்க.///// காமெடி கீமெடி பண்ணலையே என்னைய வைச்சு???!!! அவ்வ்வ்…. 🙂 🙂 😉

    • chitrasundar5 Says:

      மகி,

      ‘முந்தாநாள் இரவு/படுக்கப் போகுமுன் வெந்தயம் ஊற வைத்து,நேற்று காலை அரிசி,உளுந்து சரியான அளவில் பார்த்து ஊற வைத்து,இவற்றை பதமாக அரைத்து,பக்குவமாகக் கரைத்துவைத்து,அதைப் புளிக்க வைக்க என்னென்ன வேலையெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து,இன்று காலை எழுந்தவுடன் மாவு புளித்துவிட்டதா என உறுதி செய்துகொண்டு, சட்னி, சாம்பார்,தூள் என ரெடி செய்து,அதன் பிறகு இட்லியை வேக வைத்து சாப்பிடுவது’, இட்லி செய்ய‌ மூன்று நாட்கள் தேவைப்படுகிறது.

      ஆனால் இடியாப்பத்திற்கு மூன்று மணி நேரமே அதிகமானது.அதிலும் நம்ம ஊர் மிக்ஸியாக இருந்தால் நீங்க எழுதியதில் உள்ள உலர்த்தி,சலித்து இவையிரண்டும் தேவையில்லை.பாருங்க எதுல வேலை அதிகமுன்னு.அதனால இரண்டொருநாளில் செஞ்சி பாத்துட்டு வந்து சொல்லுங்க.

      எங்கோ ஒரு இடத்தில்,இடையில் “ஊருக்குப் போனீங்கனா” என்பதை எப்படி எழுதாமல் விட்டுவிட்டேன்!

      • Mahi Says:

        //எங்கோ ஒரு இடத்தில்,இடையில் “ஊருக்குப் போனீங்கனா” என்பதை எப்படி எழுதாமல் விட்டுவிட்டேன்!// 🙂 அதான பார்த்தேன்?! 😉

        நீங்க என்னதான் சொல்லுங்க, இட்லிக்கு வேலை கம்மிதான்! 😉 அதுவும் கலிஃபோர்னியா வந்தப்புறம் புளிக்கவைக்க டெக்னிக்ஸும் தேவைப்படறதில்லை.நல்லாவே பொங்கிருது! எங்க வீடுகள்ல இடியாப்பம் அவ்வளவாச் சாப்பிடமாட்டோம்,சந்தகைதான். அதனால் உங்க செய்முறை நீஈஈஈளமாத் தெரியுது எனக்கு. எனிவேஸ்,
        ப்ரீத்தி ப்ளூ லீஃப் இருக்குங்க, நீங்க பொறுமையா இவ்வளவு விளக்கம் தந்ததுக்காகவாவது செய்து பார்த்துருவேன் ஒருமுறை! 🙂
        நன்றி!

  4. pappathi Says:

    hai..உங்களுடைய சமையல் குறிப்பு அனைத்தும் நன்றாக உள்ளது. இடியாப்பம் செய்முறை நன்கு புரியும் படி இருக்கு. படங்களை பார்த்தாலேஇடியாப்பம் மெதுவாக இருக்குனு தெரிகின்றது. வாழ்த்துக்கள்:)


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: