தயிர்சாதம்-2

 

தயிர் சாதம் செய்யும்போது தயிர் மட்டும் சேர்த்தோ அல்லது பால்&தயிர் சேர்த்தோ செய்வோம்.போதுமான தயிர் இல்லாத சமயத்தில் இந்த செய்முறை கைகொடுக்கும்.இதில் என்ன விசேஷமென்றால் தயிர் குறைவாக சேர்த்தாலும் மிக அதிகமாக சேர்த்ததுபோலவே இருக்கும்.சுவையும் சூப்பராக இருக்கும்.ஒரு தடவை இந்த முறையில் செய்தால் அடுத்தடுத்து இப்படியேதான் செய்வீங்க.

செய்முறைக்கான லிஸ்ட்தான் நீளமாக இருக்கிறதே தவிர செய்வது மிக எளிது. அலங்கரிக்க பகுதியை உங்கள் விருப்பம்போல் மாற்றிக்கொள்ளலாம்.

தேவையானவை:

பச்சரிசி_ஒரு கப்
தயிர்_ 3 டேபிள் ஸ்பூன்
சாதம் வடித்த கஞ்சித்தண்ணீர்_சாதத்தில் 1/4 பங்கு
உப்பு_தேவைக்கு

அலங்கரிக்க:

இஞ்சி
பச்சை மிளகாய்
கொத்துமல்லி இலை
கேரட்
திராட்சை
மாதுளை முத்துக்கள்
வெள்ளரிப் பிஞ்சு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை

செய்முறை:

அரிசியை சாதாரணமாக வேக வைத்து வடிக்கவும்.குழைய வேண்டுமென்பதில்லை.நீர் வடிந்ததும் சூடான சாதத்தில் அதன் அளவில் 1/4 பங்கிற்கு இப்போது வடித்த சூடான கஞ்சித்தண்ணியை ஊற்றி ஒரு ஸ்பூனால் நன்றாகக் கலக்கவும்.சாதம் உடைந்து,நொறுங்கி தண்ணீருடன் சேர்ந்துவிடும்.

பிறகு தாளிக்க வேண்டியதைத் தாளித்து சாதத்தில் கொட்டிக் கிளறவும்.சாதம் நன்றாக ஆறிய பிறகு தயிர்,உப்பு சேர்த்துக் கிண்ட வேண்டும்.தயிர் கொஞ்சமே சேர்த்தாலும் நிறைய சேர்த்ததுபோல் இருக்கும்.

அதன் பிறகு இஞ்சி,பச்சை மிளகாய்,கொத்துமல்லி இலை,கேரட், திராட்சை,மாதுளை முத்துக்கள்,வெள்ளரிப் பிஞ்சு இவற்றை விருப்பமான வடிவத்தில் நறுக்கி சேர்த்துவிடலாம்.

இப்போது சுவையான வெயிலுக்கேற்ற தயிர் சாதம் ரெடி.இதிலேயே காரம்,காய்,பழமென எல்லாம் இருப்பதால் தொட்டு சாப்பிட எதுவுமே தேவையில்லை.அப்படியே சாப்பிடலாம்.

கிராமத்து உணவு, சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 15 Comments »

15 பதில்கள் to “தயிர்சாதம்-2”

  1. yasmin Says:

    குழந்தைகளுக்கான நல்ல உணவு…

  2. Packya Says:

    Curd rice sepero super. Easy and tasty food..
    Different style.. Congrats

  3. chollukireen Says:

    வெய்யில் காலத்துக்கு ஜில்லுனு சாப்பிட நன்றாக இருக்கும்.
    பாலும் தயிரும் சேர்த்துச் செய்யும்போது தயிராகி சற்று சாதம் இருகும். இதில் கஞ்சி சேர்ப்பதால் அந்த வேலையைக் கஞ்சி
    செய்துவிடும். சத்து வீணாகாமல் கஞ்சியும் உபயோகப் படுத்துவது நன்றாக இருக்கிறது.

    • chitrasundar5 Says:

      ஆமாம் அம்மா, கஞ்சியுமே உப்பு சேர்த்தால் சுவையாக‌ இருக்கும்.அதில் சாதமும் தயிரும் சேர்க்கும்போது இன்னும் சூப்பர். வேலை பளுவுக்கிடையில் நீங்க வந்து போவது மகிழ்ச்சி.அன்புடன் சித்ரா.

  4. kalyani.M Says:

    சித்ரா உங்கள் சமையல் குறிப்புகள் அனைத்துமே மிகவும் அருமையாக உள்ளன. தொடர்ந்து உஙகள் கைப்பக்குவத்தைச் செய்து ருசித்து வருகிறேன். தயிர் சாதம் இம்முறையில் செய்தால் என் பெண்ணுக்கு மிகவும் பிடிக்கும். பார்க்கவே மிகவும் அருமையாக உள்ள்து. வாழ்த்த்க்கள்.

    • chitrasundar5 Says:

      கல்யாணி,

      என் சமையல் செய்முறை உங்களுக்குப் பிடிக்கிறது எனும்போது மகிழ்ச்சியாக உள்ளது.உங்க பாப்பாவுக்கு தயிர் சாதம் பிடிக்குமா!எங்க வீட்டிலும் அப்படியே. வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி. மீண்டும் சந்திப்போம்.

  5. Mahi Says:

    I always make rice in pressure cooker! In fact I have never ever made rice in another pots! 😉

    Curd rice looks delicious with those fruits! 😛

    • chitrasundar5 Says:

      மகி,

      எனக்கு/எங்க வீட்டிலும் சாதம் வடித்து செய்தால்தான் பிடிக்கிறது.அதற்காகவே வேகவைத்து வடித்துவிடுவேன். இந்தியாவில் இருந்தவரைதான் குக்கருடன் பிரச்சினை.அரிசியும் பருப்பும் கலக்காமல் வெந்ததாக எனக்கு ஞாபகமில்லை.
      வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி மகி.

  6. subi Says:

    Nan ippadi than seiven, Enakku ippadi seithal than pidikkum

  7. subi Says:

    This is Wondrful website, Very Useful to Youngsters


chitrasundar5 -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி