இது கிராமங்களில் போடும் ஊறுகாயாகும்.இதற்கு நல்ல முற்றிய மாங்காயாக இருந்தால் நல்லது.ஏனெனில் பருப்பின் துவர்ப்பு குறைவாக இருக்கும்.100,200 என (எண்ணிக்கையில்) போடுவாங்க.இவ்வாறு போட்டு வைத்துக்கொண்டால் யார் வீட்டிலாவது உடல்நிலை சரியில்லை என்றாலோ அல்லது மசக்கை சமயத்திலோ வந்து கேட்டு வாங்கிச்செல்வார்கள்.
சதைப்பகுதி மட்டுமல்லாமல் அதன் உள்ளே உள்ள பருப்பு மிகவும் நல்லது. அதைப் பயன்படுத்தி வயிற்றுவலி,வயிற்றுப்போக்கு என்றால் குழம்பு செய்வாங்க.இந்த பருப்பு மாதவிடாய் பிரச்சினைக்கும் நல்லதுனு சொல்லுவாங்க. பருப்பை அப்படியேகூட சாப்பிடலாம்.இள மாங்காயின் பருப்பாக இருந்தால் துவர்ப்பு அதிகமாக இருக்கும்.முற்றிய மாங்காயெனில் மாவு மாதிரி,சுவையாக இருக்கும்.
என்னிடம் ஊறுகாயின் படங்கள் இல்லை.இங்கே (வெளிநாட்டில்) இந்த ஊறுகாயைப் போடவும் முடியாது. வெயிலும் பிரச்சினை.மாங்காயும் பழ மாங்காய் போலத்தான் இருக்கும்.ஊருக்குப் போனால்தான் எடுத்துவர வேண்டும்.எங்கம்மா ஊறுகாய் போடும் முறையைக் கீழே கொடுத்துள்ளேன்.
தேவையானவை:
மாங்காய்
உப்பு
செய்முறை:
படத்திலுள்ளதுபோல் எல்லா மாங்காய்களையும் இரண்டு பக்கமும் கீறி வைக்கவும.
பிறகு கீறிய பகுதி நிறைய உப்பை வைத்து அடைத்து வைக்கவும்.இதற்கு உப்பு நிறைய தேவைப்படும். இவ்வாறே எல்லா மாங்காய்களையும் செய்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து மூடவும்.
மூன்றாவது நாள் நல்ல வெயில் விழும் இடத்தில் ஒரு பெரிய தட்டில் ஒவ்வொரு மாங்காயாக எடுத்து அடுக்கி வைக்கவும்.
இப்போது மாங்காயின் பச்சை நிறம் மாறி மஞ்சள்,ப்ரௌன்,அடுத்து கருப்பு என மாறும்.
பாத்திரத்தில் உப்புநீர் நிறைய இருக்கும்.அதை அப்படியே வெயிலிலேயே வைக்கவும்.
மாலையானதும் மாங்காய்களை மீண்டும் அந்த உப்புநீர் உள்ள பாத்திரத்திலேயே எடுத்து வைத்து மூடவும்.
அடுத்த நாளும் இப்படியே அதாவது பாத்திரத்திலுள்ள நீர் முழுவதும் வற்றி, மாங்காயும் நீர் இல்லாமல் வற்றிக் காயும்வரை இதை செய்ய வேண்டும்.
இதற்கு சில வாரங்கள் ஆகலாம்.அதன்பிறகு ஊறுகாயிலுள்ள சதைப் பகுதியை தயிர்சாதம்,கஞ்சி போன்றவற்றிற்கும்,கொட்டையின் உள்ளேயுள்ள பருப்பைக் குழம்பிற்கும் பயன்படுத்தலாம்.
இதில் உப்பு நிறைய சேர்த்து செய்வதால் வருடங்களானாலும் கெட்டுப்போகாது. நன்றாகக் காய்ந்த,சுத்தமான கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
5:39 பிப இல் ஏப்ரல் 11, 2012
New recipe to me…nice write-up! Enjoyed reading it.
6:38 பிப இல் ஏப்ரல் 12, 2012
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மகி.
5:18 முப இல் ஏப்ரல் 10, 2014
waw too teast