கீழேயுள்ள எல்லா பழங்களும் எங்க ஊர் ஃபார்மெர்ஸ் மார்க்கெட்டில் வாங்கியது.
இது fresh dates.இதன் சுவை வித்தியாசமாக,அதிக இனிப்பாக இருக்கும்.
Dates லேயே wet dates,dry dates என கிடைக்கும்.படத்திலிருப்பது dry dates.
guava
mango plums
plums
peaches
pears
cantaloupe
grapes
இது ஈச்சம்பழம்.கடலூரிலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் வாங்கியது.
5:38 பிப இல் ஏப்ரல் 11, 2012
Wow…superb! Fresh fruits always tastes better! Super-a irukkunga!
12:16 பிப இல் ஏப்ரல் 12, 2012
ஃபார்மர்ஸ் மார்க்கெட் பற்றி நீங்க சொல்கையில் எல்லாம் எனக்கும் ஆவலாக இருக்கு! எங்க வீட்டுப்பக்கம் இருக்கும் மார்க்கெட் வெள்ளிக்கிழமைகளில் நடக்கிறதாம்,இப்பத்தான் அந்தத் தகவலையே தேடிக் கண்டுபுடிச்சிருக்கேன், எப்ப அங்கே போய் ஷாப்பிங் செய்ய நேரம் வாய்க்கப் போகிறதோ! 🙂
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் சித்ரா மேடம்!
5:57 பிப இல் ஏப்ரல் 12, 2012
மகி,
கண்டு பிடிச்சிட்டிங்களா!ஒரு தடவ போய்ட்டு வாங்க.கண்டிப்பாக வித்தியாசம் தெரியும்.சீஸனுக்கு ஏற்ற காய்கள், பழங்கள், கீரைகள் வரும். ப்ரெட்,முட்டை, ஃப்ரெஷ் பாப்கார்ன் வாங்கலாம்.விலைதான் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். இங்கு சாப்பாட்டுக் கடையெல்லாம் ஜோராக நடக்கும்.நாண் கடைகூட உண்டு. நாங்க இருக்கும் இடத்தில் இரண்டு கடைகள்.ஒன்று வெள்ளி,மற்றொன்று சனிக்கிழமை.உங்க பக்கம் எப்படி என்று போய்ட்டு வந்து சொல்லுங்க.
‘சித்ரா’ம்ம்ம் ‘சித்ரா அக்கா’ இது கூட நல்லாருக்கே.
உங்களுக்கும்/உங்க வீட்டிலுள்ள அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
7:39 பிப இல் ஏப்ரல் 12, 2012
வணக்கம். சித்ரா. என் பேர் விஜி. நான் இங்கு இன்று உங்க வலைப்பக்கத்திற்க்கு முதல் வருகை. நல்ல அருமையான வலைபூ. மகியின் வலைப்பக்கத்தில் தான் உங்க வலைப்பூவை பார்த்தேன். அடிக்கடி வருகிறேன்.
நல்ல ரெசிப்பிஸ் அதுவும் நல்ல தமிழில் இருப்பதால் நன்றாக இருக்கிறது.
நன்றி மகி.&நன்றி சித்ரா.
உங்களுக்கும் என் இனிய த்மிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
என் வலைதள்: http://www.vijisvegkitchen.blogspot.com
Viji
12:03 பிப இல் ஏப்ரல் 13, 2012
விஜி,
வாங்க.இனி அடிக்கடி வாங்க.உங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.உங்களுக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
2:42 முப இல் ஏப்ரல் 13, 2012
பழங்களெல்லாம், பழுத்த பழமாக நன்றாக இருக்கு. அட நம்மபக்கத்து ஈச்சம் பழம். ஈச்சம் பழத்தைப் பார்த்திருக்கிறேன்.
குலை,குலையாக பந்தல் அலங்காரத்தில். சாப்பிட்டதில்லை.
மற்ற பழங்கலெல்லாம் வா, வந்து எடுத்துக்கொள் என்று கூப்பிடுவதுபோல இருக்கிரது. ஸந்தோஷமாக சாப்பிடப் பழங்கள்.
நன்றியுடன் நந்தன வருஷத்து வாழ்த்துக்களும் உங்கள் குடும்பத்தினருக்கும், உனக்கும் அன்புடன் சொல்லுகிறேன்.
1:25 பிப இல் ஏப்ரல் 13, 2012
காமாஷி அம்மா,
வந்து எடுத்துக்கோங்க. உங்களுக்கில்லாததா? பந்தல் அலங்காரத்திலுள்ள அதே ஈச்சங்காய்கள்தான் அம்மா.அது மரத்திலேயே பழுத்தால் அவ்வளவு ருசியாக இருக்கும்.முன்பெல்லாம் எங்க ஊரில் சும்மாவே கிடைக்கும்.இப்போது பார்க்க முடிவதில்லை. உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
12:03 பிப இல் ஏப்ரல் 13, 2012
சித்ரா அக்கா என்று கூப்பிட ஆசையாய் இருந்தாலும், கொஞ்சம் தயக்கமாய் இருந்ததுங்க. பலமுறை டைப் பண்ணிவிட்டு மாத்தியிருக்கிறேன். 🙂 காரணம்..சிலருக்கு அக்கா என்று கூப்பிட்டால் வசதிப்படாது..[தெனாலிராமன் பூனை கதைதான்! 😉 பட்டுத் தெரிந்து கொண்டேன்]. என்னை விட வயதில் பெரியவர்கள் என்று எனக்குத் தோன்றினால் கிட்டத்தட்ட கரெக்ட்டாகவே இருக்கும், இருந்தாலும் முகம் தெரியாத நட்புக்கள் சிலருக்கு அது சரிப்படாது. 🙂
நீங்களே சொல்லிட்டீங்க, இனி என்ன சித்ரா அக்கா-ன்னே கூப்பிடறேன் இனிமேல்! 🙂
நன்றி!
2:24 பிப இல் ஏப்ரல் 13, 2012
எனக்கொன்றும் பிரச்சினையில்லை.நீங்க அப்படியே கூப்பிடுங்க.நன்றி மகி.