பலாக்கொட்டைப் பொரியல்

 

பலாப்பழம் வாங்கும்போது ஒரு சிறு கீற்றுதான் வாங்குவோம்.நிறைய வாங்க ஆசைதான்.அதன் விலையைப் பார்த்து பயந்து சுமார் 10 சுளைகள் உள்ளதாக வாங்கி வருவோம்.இந்த முறை துணிந்து (எத்தனை நாளைக்குத்தான் மான் தண்ணீர் குடிப்பது மாதிரியே நடிப்பது?) வாங்கியதில் 20 சுளைகளுக்கும் அதிகமாக இருந்தது.பழத்தை சாப்பிட்டுவிட்டு அதிலுள்ள கொட்டைகளை  பத்திரமாக எடுத்துவைத்து பொரியல் செய்துவிட்டேன்.நிறைய வாங்கியிருந்தால் இதை வைத்து கூட்டு, குருமா,சாம்பார் முதலியவை செய்திருக்க‌லாம்.

எங்க ஊர் பலாப்பழத்தைப் பார்க்க இங்கே வரவும்.பலாக்கொட்டை சாம்பாருக்கு இங்கே வரவும்.

தேவையானவை:

பலாக்கொட்டை_சுமார் 20 (எண்ணிக்கையில்)
மிளகாய்த்தூள்_ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

பலாக்கொட்டையை சமைக்குமுன் மேலேயுள்ள ஷெல் போன்ற பகுதியை எடுத்துவிட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஒரு 1/4 மணி நேரம் ஊற வைக்கவும்.இது ப்ரௌன் நிறத்தினாலான  மற்றொரு தோலை எடுப்பதற்கு.

ஊறியதும் அதன் தோலை கட்டைவிரல் நகத்தால் உரித்தோ அல்லது சுரண்டியோ எடுத்துவிடவும்.சில மென்மையான பகுதிகளில் தோல் எடுக்க வராது.அதை விட்டுவிடலாம்.

பிறகு விருப்பமான அளவில் நறுக்கிக்கொள்ளவும்.அல்லது முழு அளவிலேயே போட்டுக்கொள்ளலாம்.பார்க்க சிறுசிறு முட்டைகள் போல் இருக்கும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டுத் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு பலாக்கொட்டைகளைப் போட்டு ஒரு கிளறி கிளறி மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்துப் பிரட்டிவிட்டு பலாக்கொட்டை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு மூடி வேகவைக்கவும்.

அது நன்றாக வெந்து வரும்வரை இடையிடையே கிண்டிவிடவும்.தண்ணீர் வற்றி,நன்றாக வெந்ததும் இறக்கவும்.இது எல்லா சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.

விருப்பமானால் தேங்காய்ப்பூ,கொத்துமல்லி தூவி இறக்கலாம்.

12 பதில்கள் to “பலாக்கொட்டைப் பொரியல்”

 1. ranjani135 Says:

  அன்புள்ள சித்ரா,
  பலாக் கொட்டை பொறியல் புதிதாக இருக்கிறது. பலாக் கொட்டை போட்டு குழம்பு செய்வேன். அடுத்தமுறை பலா பழம் வாங்கினால் கோட்டையைப் போட்டுப் பொறியல் தான்.

 2. Mahi Says:

  Haven’t gone to Ranch market yet… 🙂

  We also do the recipes you mentioned..poriyal looks simple and delicious!

  • chitrasundar5 Says:

   ranch க்கு ஒன்றிரண்டு தடவ போய்ட்டு வந்தீங்கன்னா ஓரளவுக்கு சரியாகிவிடும். அப்படியும் பிடிக்கலனா போகவேண்டாம். வருகைக்கு நன்றி மகி.

 3. chollukireen Says:

  பொறியல் நன்றாக இருக்கு. கொஞ்சம் தாமதமாக எழுதுகிறேன்.
  அன்புடன்

  • chitrasundar5 Says:

   காமாஷி அம்மா,

   எவ்வளவு தாமதமானாலும் பரவாயில்லை, நீங்க‌ வந்ததே எனக்கு சந்தோஷம். அதிலும் மறுமொழி இடுவது அதைவிட சந்தோஷம். உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளுங்கள் அம்மா. அன்புடன் சித்ரா.

 4. Mahi Says:

  /ranch க்கு ஒன்றிரண்டு தடவ போய்ட்டு வந்தீங்கன்னா ஓரளவுக்கு சரியாகிவிடும்./ நான் சொன்ன காரணத்தை மறக்காம இருக்கீங்களே? 🙂
  ராஞ்ச் மார்க்கட் எங்க வீட்டில இருந்து பத்துப் பன்னண்டு மைல் போகணும் சித்ராக்கா..என்னவரின் ஆஃபீஸ் பக்கத்தில் இருக்கு. வீக்டேஸ்-ல 5 நாளும் அந்தப்பக்கம் போவதாலோ என்னவோ, வீகென்டில் அங்கே போறதுன்னாலே இவர் ரொம்ப யோசிப்பார். நானும் இந்த ஒரு பழத்துக்காக அவ்வளவு தூரம் போகணுமா என்று விட்டுடறேன்.

  போனவாரம் அங்கே ஒரு ப்ரென்ட் வீட்டுக்கு போயிருந்தோம், ஆனா பாருங்க, அவங்க வீட்டிலேயே தாமதமாகிடுச்சு, மார்க்கெட் 9 மணிக்கு க்ளோஸ் பண்ணிருவாங்களாம்! எனக்கும் ப.பழத்துக்கும் ஏழாம் பொருத்தமா இருக்குது! 😉

  • chitrasundar5 Says:

   எனக்கு இங்கு கொஞ்சம் பரவாயில்லை. பழகியதாலோ என்னவோ தெரியவில்லை. ஒருமுறை ஆர்ட்டீஷியாவில் இருக்கும் ranch க்குப் போனேன்.என்னால் உள்ளே போகவே முடியவில்லை.அப்படியே திரும்பிவிட்டேன்.நீங்க சொன்ன காரணத்தைப் படித்ததும் எனக்கு அதுதான் நினைவுக்கு வந்தது.வேறு ஏதாவது ஏஷியன் க்ரோஸ‌ரி ஸ்டோரில் கிடைக்குதானு பாருங்க.நன்றி மகி.

 5. Mahi Says:

  /.இது ப்ரௌன் நிறத்தினாலான மற்றொரு தோலை எடுப்பதற்கு./ பலாக்கொட்டையின் வெள்ளை நிறத்தோலை எடுப்பதோடு சரி..ப்ரவுன் நிறத்தோலை எடுத்ததே இல்லை! நீங்க அதையும் எடுத்துருவீங்க போல?! ரொம்பவே பொறுமைதான் உங்களுக்கு! 😉

  • chitrasundar5 Says:

   “ரொம்பவே பொறுமைதான் உங்களுக்கு”_ நன்றி மகி.

   அது கொஞ்சம் துவர்ப்பாக இருப்பதால் எடுத்துவிடுவேன்.இல்லையென்றால் சாப்பிடும்போது இவர்கள் எடுப்பார்கள். அதனால்தான்.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: