பீட்ரூட் கீரை மசியல்

 

         

பீட்ரூட் வாங்கி வந்தால் முன்பெல்லாம் அதிலுள்ள இலைகளை மனசே வராமல் (நீளமான, கலர்ஃபுல்லான தண்டுடன் கூடிய இலைகள் அழகாக‌ இருப்பதால்) தூக்கிப்போட்டு விடுவேன்.பிறகு நெட்டில் பார்த்து அதை சாலட்டில் சேர்ப்பதைத் தெரிந்துகொண்டு இப்போதெல்லாம் பருப்பு அல்லது புளி சேர்த்து நம்ம ஊர் ஸ்டைலில் மசியல் செய்துவிடுவேன். நல்ல சுவையாகவும் இருக்கிறது.இதற்கு தண்டுப்பகுதியை நீக்கிவிட்டு கீரையை மட்டும் எடுத்துக்கொள்வோம்.

தேவையானவை:

பீட்ரூட் கீரை_4 செடிகளின் இலைகள் (நான் செய்தது)
சின்ன வெங்காயம்_7
தக்காளி_பாதி
பச்சைமிளகாய்_1
புளி_சிறு கோலி அளவு
பூண்டிதழ்_7 எண்ணிக்கை
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
மிளகு_2
சீரகம்
காய்ந்தமிளகாய்_1
பெருங்காயம்

செய்முறை:

முற்றிய,பூச்சி இலைகளை நீக்கிவிட்டு,மீதமுள்ள கீரையை நன்றாக நீரில் அலசித் தண்ணீரை வடியவைக்கவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

அதே வாணலை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம்,பச்சைமிளகாய்,தக்காளி,புளி,கீரை இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கி இறக்கவும்.

தாளித்தது,வதக்கியது இவை எல்லாம் ஆறியதும் மிக்ஸியில் போட்டு மசித்து எடுக்கவும்.தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.

இப்போது சுவையான,சிறிது பிங்க் நிறத்தினாலான பீட்ரூட் கீரை மசியல் தயார்.

இது சாதத்துடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.துவையல் போலவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

9 பதில்கள் to “பீட்ரூட் கீரை மசியல்”

 1. Mahi Says:

  These greens are packed with nutritions. Nice recipe..I make simple stir-fry (as we do poriyal).

 2. chollukireen Says:

  நான் செய்ததே இல்லை. நல்ல தித்திப்பான கிழங்கின் கீரை. இளசாக கீரை இருந்தால் மிகவும் நன்றாகத்தான் இருக்கும்.
  மஹி பொரியலும் செய்துவிட்டால் போகிறது. நல்லநல்ல
  கீரை. நலம்தரும் கீரை.

  • chitrasundar5 Says:

   காமாஷி அம்மா,
   வாங்கினா செஞ்சி பாருங்க.மற்ற கீரைகளைவிட நல்லாவே இருக்கு.நானுமே முற்றிய கீரைகளை நீக்கிவிட்டு இளம் கீரையில்தான் செய்தேன்.அன்புடன் சித்ரா.

 3. packya Says:

  சுவையான பீட்ரூட் கீரை மசியல்..இவ்ளோ நாள் தூக்கி இதை சேர்த்ததே இல்லியே. இனி கீரையை கீழே போட கூடாது-னு தெரிஞ்சுகிட்டேன்..

  • chitrasundar5 Says:

   packya,
   என்னை மாதிரிதான் நீங்களும் செஞ்சிருக்கீங்க.இனி மசியலாகவும், பொரியலாகவும் செய்து சாப்பிடுவோம். வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.

 4. Dr.M.K.Muruganandan Says:

  பீட்ரூட் இலைகள் ரசனைக்குரியவை
  சலட்டாக வாய்க்கும் ரசமானது
  இரும்புச் சத்தும் உண்டு.

  • chitrasundar5 Says:

   Dr.M.K.Muruganandan,
   தங்களின் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.பீட்ரூட் கீரையில் இரும்பு சத்தும் உள்ளது என்பதைத் தெரிந்துகொண்டேன். தங்களின் மருத்துவப் பதிவுகள் மிகவும் பயனுள்ளவை.நேரமிருக்கும்போது அனைத்தையும் படித்துப்பார்க்க வேண்டும். நன்றி.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: