ரைஸ் ஸ்டிக்ஸ் உப்புமா/Rice sticks upma

 

படத்திலுள்ளதுபோல் நிறைய வெரைட்டியில்  Rice sticks கிடைக்கும்.ஒரு பாக்கெட்டில் 3 அல்லது 4 bundles இருக்கும்.இதை வைத்து சாதாரண உப்புமா,கிச்சடி,கலவை சாதங்கள் செய்வது போலவும் வெரைட்டி சேவை  செய்யலாம்.

இவற்றை நூடுல்ஸ் போல நீளமாகவோ அல்லது உடைத்துவிட்டு நம்ம ஊர் சேமியா போலவோ பயன்படுத்தலாம். உடைத்து விடும்போது ஒரு ப்ளாஸ்டிக் கவரில் வைத்து செய்ய வேண்டும்.இல்லையென்றால் சுற்றிலும் சிதறும்.

தேவையானவை:

Rice sticks_ஒரு bundle ல் பாதி
சின்ன வெங்காயம்_5
விருப்பமான காய்கள்_பீன்ஸ்_10,கேரட்_1 சிறியது (நான் சேர்த்தது)
பச்சை மிளகாய்_1
இஞ்சி_சிறு துண்டு
உப்பு_தேவைக்கு
எலுமிச்சை சாறு_சிறிது
கொத்துமல்லி இலை

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
கடலைப் பருப்பு
முந்திரி (போட மறந்தாச்சு)
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

Rice sticks ஐ அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி,சிறிது உப்பு சேர்த்து ஒரு 20 நிமி வைக்கவும்.அப்போதுதான் ஊறி சாஃப்டாக இருக்கும்.பிறகு நீரை வடித்துவிட்டு ஒரு இட்லிப் பாத்திரத்தில் இட்லி அவிப்பதுபோல் அவிக்கவும்.சீக்கிரமே வெந்துவிடும். வெந்ததும் எடுத்து உதிர்த்துவிடவும்.அல்லது ஊறிய Rice sticks ஐ அப்படியேகூட‌ சேர்க்கலாம்.

இதற்கிடையில் வெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சி இவற்றை நறுக்கி வைக்கவும்.கேரட்,பீன்ஸ் இவற்றை மிக மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். அடுத்து கேரட்,பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் சிறிது உப்பு சேர்த்து ,(ஏற்கனவே  Rice sticks ல் உப்பு சேர்த்துள்ளோம்) காய் வேக சிறிது தண்ணீர் தெளித்து வேக விடவும்.

காய் வெந்ததும் உதிர்த்து வைத்துள்ள Rice sticks ஐப் போட்டு forks ஐப் பயன்படுத்திக் கிளறிவிடவும்.எல்லாம் கலந்து  ரைஸ் ஸ்டிக்ஸ் நன்றாக சூடேறியதும் எலுமிச்சை சாறு விட்டு,கொத்துமல்லி தூவி இறக்கவும்.

தேங்காய் சட்னி,வெஜ்&நான்வெஜ் குருமா தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.

11 பதில்கள் to “ரைஸ் ஸ்டிக்ஸ் உப்புமா/Rice sticks upma”

 1. Mahi Says:

  ரைஸ் ஸ்டிக்ஸ் சூப்பரா இருக்குங்க! முன்பு ரான்ச் மார்க்கட் பக்கத்தில் இருக்கையில் இது வாங்கியிருக்கிறேன். அழகா செய்து காட்டியிருக்கீங்க! 🙂

 2. Mahi Says:

  சொல்ல மறந்துட்டேனே! நான் உப்பு சேர்த்து ஊறவைச்சதில்லை, தண்ணீர் கொதிக்கவிட்டு, உப்பு போட்டு, இந்த ரைஸ் நூடுல்ஸையும் அதில் போட்டு மூடி அடுப்பிலிருந்து இறக்கி 10 நிமிஷம் வைச்சிருவேன், பிறகு தண்ணீரை வடிச்சுட்டு தாளிப்பேன். இந்த நூடுல்ஸை வாங்கும் வாய்ப்புக் கிடைச்சா நீங்க சொன்னதுபோல செய்துபார்க்கிறேன்.

  • chitrasundar5 Says:

   அந்த நூடுல்ஸ என்னெல்லாம் பன்னமுடியுமோ அத்தனையும் பன்னிடுவேன்.ஒரு தடவ வாங்கினா சீக்கிரம் காலியாகாது.

   Ranch ல் Wonton Wrap வாங்கியிருக்கிங்களா? இல்லையென்றால் இதப் பாத்துட்டுப் போங்க.https://chitrasundar5.wordpress.com/?s=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE.
   உங்க விருப்பம்போல் எந்தக் காய் வேண்டுமானாலும் வைத்து செய்துகொள்ளலாம்.வருகைக்கு நன்றி மகி.

   • Mahi Says:

    சித்ராக்கா, Wonton wrap ஃப்ரீஸர் செக்ஷன்ல இருக்குமா? தேடிப் பார்த்தவரை ஸ்ப்ரிங் ரோல் ஷீட்ஸ்தான் இருந்தது. இந்த wonton wraps கண்ணுலயே படல்லை!

    உங்க சமோசா சூப்பரா இருக்கு. நேத்து பெரிய கமென்ட் டைப்பண்ணினேன், போஸ்ட் ஆகறதுக்குள் ஏதோ Stuck ஆகிருச்சு. தகவலுக்கு நன்றி! 🙂

   • chitrasundar5 Says:

    நான் நேற்றே இதை எழுதியிருக்க வேண்டும்.மறந்துவிட்டேன். காய்கறிகள், பழங்கள் இருக்குமிடத்திலுள்ள ஃப்ரிட்ஜ் செஷனில் இருக்கும்.டோஃபு இருக்குமே அதனுடன்.இதே பெயரில் இருக்குமா தெரியவில்லை.வேறு பெயரில்கூட இருக்கலாம்.தேடிப்பாருங்க.நன்றி மகி.

 3. Mahi Says:

  ஓ…ஃப்ரிட்ஜ்-ல் பார்க்கணுமா?! நான் ஃப்ரீஸர் செக்ஷனில் மட்டும் பார்த்துவிட்டு வந்துட்டேன். நிதானமா பார்க்க முடியலை, அதற்குள் என்னவர் பில் போடப் போகணும் என்று ஒற்றைக்கால்ல நின்னுட்டார்! 😉 சரின்னு ஸ்ப்ரிங் ரோல் ஷீட்டை வாங்கிவந்திருக்கேன், அதிலே நல்லா இருக்குமா சித்ராக்கா? பொதுவா எனக்கு அந்த ஸ்ப்ரிங் ரோலே புடிக்காது! 😉 [அப்புறம் எதுக்கு வாங்கினே என்றெல்லாம் கேக்கப் படாது..சம்திங் இஸ் பெட்டர் தன் நத்திங்-னு வாங்கிட்டேன்! ஹிஹி 🙂 ]

  • chitrasundar5 Says:

   “அப்புறம் எதுக்கு வாங்கினே என்றெல்லாம் கேக்கப் படாது”_நான் கேட்கவே மாட்டேன். நானும் ஒரு தடவ இரண்டு ஸ்பிரிங்ரோல் ஷீட்ஸ் வாங்கிவந்து (ஸ்பிரிங்ரோல் செய்யத்தான்) அதுவே எனக்கு சரிவரல. வீணாக்கிவிட்டேன்.நீங்க ட்ரைபன்னி பாருங்க.ஒருவேளை வரலாம்.நன்றாக வந்தால் சொல்லுங்க மகி.

 4. yasmin Says:

  ரைஸ் ஸ்டிக்ஸ் உப்புமா பார்க்கவே டேஸ்ட் பண்ணனும் ஆசையா இருக்கு. வாழ்த்துக்கள்….

 5. Dr.M.K.Muruganandan Says:

  சமைக்கத் தெரியாதவன்
  சாப்பாட்டைப் பார்த்து வாயூறுகிறேன்.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: