ராகி சேமியா உப்புமா

தேவையானவை:

ராகி சேமியா_சுமார் 100 கிராம் (பாதி பாக்கெட்)
சின்ன வெங்காயம்_5
இஞ்சி_சிறிது
பச்சை மிளகாய்_1
கேரட்_1 (சிறியது)
பீன்ஸ்_5
கொத்துமல்லி இலை
எலுமிச்சை சாறு_கொஞ்சம்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
கடலைப்பருப்பு
காய்ந்தமிளகாய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

சேமியாவை அது மூழ்கும் அளவு தண்ணீரில் சிறிது உப்பு போட்டு ஒரு 5 நிமி ஊற வைக்கவும்.பிறகு நீரை வடிய வைக்கவும்.

வடிய வைத்த சேமியாவை இட்லிப் பாத்திரத்தில் வைத்து இட்லி அவிப்பதுபோல் வேக வைக்கவும்.சீக்கிரமே வெந்துவிடும்.

வெந்ததும் எடுத்து உதிர்த்து வைக்கவும்.

இப்போது வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றை நறுக்கி வைக்கவும். கேரட், பீன்ஸ் இவற்றை மிக மெல்லியதாக நறுக்கவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு, வெங்காயம்,இஞ்சி, பச்சைமிளகாய்,கேரட்&பீன்ஸ் இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.காய் வேக சிறிது தண்ணீர் தெளித்து, சிறிது உப்பு மேலாக தூவி மூடி வேக வைக்கவும்.ஏற்கனவே சேமியாவில் சிறிது உப்பு சேர்த்துள்ளோம்.

காய் வெந்ததும் உதிர்த்து வைத்துள்ள சேமியாவைச் சேர்த்துக் கிளறிவிடவும். எல்லாம் சேர்ந்து சேமியா சூடேறியதும் எலுமிச்சை சாறு,கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.

தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Advertisements

6 பதில்கள் to “ராகி சேமியா உப்புமா”

  1. Mahi Says:

    Never added veggies in Ragi semia upma..looks yummy Chithra Akka! 😛

    • chitrasundar5 Says:

      வீட்டிலுள்ளவர்களுக்கும் எனும்போதுதான் இப்படி.எனக்கென்றால் இட்லி மாதிரி அவிப்பதுடன் நிறுத்தி,தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டுவிடுவேன்.வருகைக்கு நன்றி மகி.

  2. chollukireen Says:

    உடம்புக்கு மிகவும் நல்லது. காய்கறிகளும் இருக்கு.லெமன் ருசியை அதிகப்படுத்தும். நல்ல குறிப்பாக எழுதியிருக்கிறாய்.
    ஆவியில் வேக வைப்பது நல்ல யோசனை. இம்மாதிறி வித்தியாஸமான குறிப்புகள் ஸமயத்திற்கு மிகவும் உதவும்.

    • chitrasundar5 Says:

      காமாஷி அம்மா,

      மீண்டும் பார்த்ததில் சந்தோஷம்.வாங்கும் பாக்கெட்டிலேயே அவிப்பது பற்றி உள்ளது. ஆமாம் அம்மா சத்தான,சுவையான‌ உணவுதான்.அன்புடன் சித்ரா.

      • chollukireen Says:

        நான் ரெடி மேடாக வாங்கி செய்ததில்லை. விதம் எனக்குப் பிடித்திருந்தது.

      • chitrasundar5 Says:

        காமாஷி அம்மா,

        “நான் ரெடி மேடாக வாங்கி செய்ததில்லை”_அப்படின்னா நீங்களே செய்விங்கிளா?நேரமிருந்தால் அதைப் பற்றி பதிவு போடுங்கமா.எங்களுக்கும் பயன்படும்.அன்புடன் சித்ரா.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: