மிக்ஸ்டு வெஜிடபிள் சமோசா/Mixed vegetable samosa

 

இரண்டு வாரங்களுக்குமுன் சமோசா பற்றி பேசிப்பேசியே அதை செய்தேயாக வேண்டிய கட்டாயமாகிவிட்டது. டிசைனெல்லாம் பார்க்காமல் எப்போதும் wonton wraps பயன்படுத்தியே செய்வேன். இந்த முறை ஒரு மாறுதலுக்கு நம்ம ஊர் ஸ்டைலில் செய்துவிட்டேன்.ஃபில்லிங் செய்முறை மட்டும் என் விருப்பப்படி ஒவ்வொரு முறையும் மாறும்.இந்த முறை விருப்பமான காய்கள் சேர்த்து செய்துள்ளேன். பிடித்திருந்தால் இப்படியும் செய்து பார்ப்போமே.

மேலேயுள்ள சமோசாவின் செய்முறையைக் காண இங்கே வருக‌.

சமோசாவிற்குத் தேவையானவை:

மேல்மாவு
ஃபில்லிங்
பொரிக்கத்தேவையான எண்ணெய்

மேல் மாவிற்குத் தேவையானவை:

மைதா_ஒரு கப்
உப்பு_தேவைக்கு
எண்ணெய்_2 டீஸ்பூன்
சமையல் சோடா_துளிக்கும் குறைவாக‌

செய்முறை:

மைதா,சமையல் சோடா,உப்பு மூன்றையும் இரண்டு முறை சலித்தெடுக்கவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு மிதமான சூடானவுடன் அடுப்பை நிறுத்திவிட்டு மைதா கலவையைக் கொட்டி கிண்டவும்.

பிறகு கைகளால் மாவுக்கலவை ப்ரெட் க்ரம்ப்ஸ் மாதிரி வரும்வரை நன்றாகக் கலக்கவும்.

அடுத்து சிறிதுசிறிதாகத் தண்ணீர் தெளித்து பிசையவும்.சப்பாத்தி மாவு பதம் வந்ததும் மாவு முழுவதும் எண்ணெய் தடவி ஒரு 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.

பிறகு மாவு முழுவதையும் உள்ளங்கையில் வைத்து ஆள்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் இடையில் சிறுசிறு பல்பு மாதிரி வெளியே தள்ளி கிள்ளிகிள்ளி வைக்கவும்.இது மாதிரி செய்தால் எண்ணெயில் பொரிக்கும்போது கீறலோ,வெடிப்போ இல்லாமல் இருக்கும்.

எல்லா மாவையும் இதேமாதிரி செய்து மூடி வைத்துவிட்டு ஃபில்லிங் செய்யத்தயாராவோம்.

ஃபில்லிங்/மசாலா செய்யத் தேவையானவை:

உருளைக்கிழங்கு_2
பச்சைப்பட்டாணி_ஒரு கைப்பிடி
கேரட்_சிறியது ஒன்று
பீன்ஸ்_5
வெங்காயத்தாள்_1
இஞ்சி_சிறு துண்டு
பூண்டிதழ்_2
சின்ன வெங்காயம்_10
பச்சைமிளகாய்_1
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை

தாளிக்க:

எண்ணெய்
கிராம்பு_2
பட்டை_1
பிரிஞ்சி இலை_1
முந்திரி_ 10
சீரகம்
பெருங்காயம்

செய்முறை:

பட்டாணியை முதல் நாளிரவே ஊறவைக்கவும்.அடுத்த நாள் பட்டாணி,உருளை இவற்றை வேகவைக்க‌வும்.இவை வெந்து இறக்குமுன் கேரட்,பீன்ஸ் இவற்றை முழுதாகப் போட்டு பாதி வெந்ததும் எடுத்துவிடவும்.இவை ஆறியதும் விருப்பமான வடிவத்தில் நறுக்கவும்.

இஞ்சி,பூண்டு தட்டிவைக்கவும்.வெங்காயம்,பச்சைமிளகாய் இவற்றை அரிந்து வைக்கவும்.அவ்வாறே வெங்காயத்தாளையும் நறுக்கித் தனியாக வைக்கவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்க வேண்டியதை அடுத்தடுத்து சேர்த்து தாளித்துவிட்டு,இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும்.

அடுத்து வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.இவை வதங்கியதும் பட்டாணி,நறுக்கி வைத்துள்ள காய்களை சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு மிதமானத்தீயில் மூடி வேக வைக்கவும்.

கலவை ட்ரையாக இருக்கட்டும்.இறுதியில் வெங்காயத்தாள் சேர்த்துக் கிளறி, எலுமிச்சை சாறு விட்டு, கொத்துமல்லி தூவி இறக்கவும்.

இப்போது சமோசாவுக்கான ஃபில்லிங் தயார்.சமோசாவில் ஃபில்லிங் வைப்ப‌தற்குமுன் இதிலுள்ள பட்டை,கிராம்பு,பிரிஞ்சி இலை இவற்றை எடுத்துவிடவும். சாப்பிடும்போது கடிபடுமோ என பயந்துகொண்டே சாப்பிடாமல் இருக்கத்தான்.

சமோசா டிஸைனை பேப்பரில் செய்துகாட்டியுள்ளேன்.

மாவை எடுத்து தேய்த்து அரை வட்டமாக வெட்டி

அதில் ஒரு அரை வட்டத்தை எடுத்து அதன் ஓரம் முழுவதும் (கோடு போட்டுள்ள பகுதி)தண்ணீர் தொட்டு ஈரமாக்கவும்.

ஒரு முனையை உள்நோக்கி மடிக்கவும்.

அதேபோல் அடுத்த முனையையும் மடித்து நன்றாக ஒட்டவும்.

இப்போது உள் பகுதியில் மசாலா வைக்கப் போதுமான கோன் போன்ற பகுதி தயார்.

இதனுள்ளே மசாலாவை வைத்து ஒட்டிவிட்டு,லேஸாக முன்னோக்கி மடித்துவிடவும்.இதேபோல் எல்லா மாவையும் செய்துவைக்கவும்.

பிறகு அடுப்பில் எண்ணெய் வாணலை ஏற்றி சமோசாக்களைப் பொரித்தெடுக்கவும்.

கெட்சப்புடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

Advertisements
சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 8 Comments »

8 பதில்கள் to “மிக்ஸ்டு வெஜிடபிள் சமோசா/Mixed vegetable samosa”

  1. chollukireen Says:

    அழகா, அருமையா செய்முறை விளக்கத்துடன் சமோசா அமைந்திருக்கு. காய்கறிகளும் சேர்ந்து சூப்பர்தான். சாப்பிடவும் ,விருந்தினர்கள் கூட இருந்தால் செய்து கொடுத்துக்கொண்டே இருக்கலாம். ரொம்பவே நன்றாக இருக்கு.

    • chitrasundar5 Says:

      காமாஷி அம்மா,

      எந்தக் காயைச் சேர்த்தாலும் ஒதுக்காமல் (ஒதுக்க முடியாமல்)சாப்பிடுவதால் விருப்பமான காய்களைச் சேர்த்துவிடுவேன்.சமைக்க முயற்சிப்பவர்களுக்கு உதவுமே என்றுதான் செய்முறை விளக்கப்படம் போட்டேன். உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. அன்புடன் சித்ரா.

  2. Mahi Says:

    நல்லா இருக்கு சித்ராக்கா சமோசா! செவ்வக வடிவத்தில் பார்க்க வித்யாசமா அழகா இருக்கு.

    முக்கோண சமோசாவுக்கு பேப்பர்ல வட்டம் போட்டு, கட் பண்ணி, பேனால வரைஞ்சு! அடடா…தெளிவா விளக்கிட்டீங்க! 🙂

    நானும் வாண்டன் ராப் வாங்கி(!) இதே போல காய்கறி ஃபில்லிங் வைச்சு செய்து பார்ப்பேன்.

    • chitrasundar5 Says:

      எவ்வளவோ முயற்சித்தும் நாமே செய்யும்போது விதவிதமான முக்கோணங்களில்தான்(சம,இரு சமபக்க, அசம,…)வருகிறது.அதுக்கு இந்த செவ்வகமே பரவாயில்லை என்பதால்தான் வாண்டன் ராப் வாங்குவது. வேலையும் கம்மி.

      “நானும் வாண்டன் ராப் வாங்கி(!) இதே போல காய்கறி ஃபில்லிங் வைச்சு செய்து பார்ப்பேன்.”_அதற்குத்தான் கடைசியில் பழத்தை எடுத்துவைக்க வேண்டும். இல்லாட்டி ஒற்றைக்காலில் நின்று பில் போட வேண்டிவரும். வருகைக்கு நன்றி மகி.

  3. Mahi Says:

    /அதற்குத்தான் கடைசியில் பழத்தை எடுத்துவைக்க வேண்டும். இல்லாட்டி ஒற்றைக்காலில் நின்று பில் போட வேண்டிவரும். / ஹஹ்ஹா! நீங்க சொன்னது சரி, ஆனா பழத்துக்கு பதிலாக “மீனை” என்று வந்திருக்கணும் சித்ராக்கா! 😉 அவர் மீன் செலக்ட் பண்ணி, அதை க்ளீன் செய்து வாங்கும்வரைதான் எனக்கு டைம்..அதுக்கும் மேல் நேராக பில்லிங் கவுன்ட்டரிலதான் நிற்பார்! 🙂 🙂

    • chitrasundar5 Says:

      நான்வெஜ் சமைப்பீங்களா! குறிப்பைப்போட்டால் உங்க ஊர் மீன்,சிக்கன் செய்முறையைத் தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை பழைய பதிவுகளில் தேடவேண்டுமோ. வருகைக்கு நன்றி மகி.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: