பேக்(ட்)டு உருளைக்கிழங்கு சிப்ஸ்/Baked potato chips

  

 தேவையானவை:

உருளைக்கிழங்கு_1
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
ஆலிவ் ஆயில்_ஒரு டீஸ்பூன்
உப்பு_சிறிது

செய்முறை:

உருளையை நன்றாகக் கழுவித் துடைத்துவிட்டு சிப்ஸ் கட்டையில் வைத்து வில்லைகள் போடவும்.இதற்கு கத்தியைக்கூடப் பயன்படுத்தலாம்.ஆனால் வில்லைகள் ஒரே அளவாக வருமாறு பார்த்துக்கொள்ளவும். இல்லையென்றால் ஒவ்வொன்றின் வேகும் நேரமும் வேறுபடும்.

ஒரு தட்டில் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கலந்துகொண்டு,அதில் உருளை வில்லைகளைப்போட்டுப் புரட்டி,மிளகாய்த்தூள் எல்லா பகுதிகளிலும் சீராகப் படுமாறு செய்யவும்.

இவ்வாறு செய்த பிறகு எண்ணெயை வில்லகளின்மேல் பரவலாக ஊற்றிக் கிளறி ஒரு பௌளில் வைத்து மூடி ஃப்ரிட்ஜில் ஒரு 1/2 மணி நேரம் வைக்கவும்.

அவனை 350 டிகிரிக்கு சூடுபடுத்தவும்.பேக்கிங் ட்ரேயில் அலுமினம் ஃபாயிலைப்போட்டு ஒவ்வொரு வில்லையாக அடுக்கி அவனில் வைத்து பேக் செய்யவும்.

ஒரு 10 நிமி கழித்த பிறகு வெளியே எடுத்து வில்லைகளைத் திருப்பிவைக்கவும். இவ்வாறே அடுத்தடுத்து 8 லிருந்து 10 நிமிடத்திற்கு இரண்டுமூன்று தடவைத் திருப்பிவிடவும்.

அடுத்து நான்கைந்து நிமிடங்களுக்கு இரண்டுமூன்று தடவை அல்லது தேவைப்படும் நேரத்திற்கு ஒருமுறை திருப்பிவிடவும்.

கடைசியில் கொஞ்சம் கவனமாக‌ இருக்க வேண்டும்.இல்லையென்றால் தீய்ந்துபோக வாய்ப்புண்டு.

ஒவ்வொரு முறை ட்ரேயை வெளியில் எடுக்கும்போதும் சிவந்து, வெந்திருக்கும் ஒருசிலவற்றை எடுத்துவிடவும்.

கடைசியில் எல்லா சிப்ஸும் சிவந்த பிறகு ட்ரேயை வெளியில் வைத்து ஆறவிடவும்.

கொஞ்சம் இருக்கட்டுமே என்று ஸ்விட்ச் ஆஃப் செய்தபிறகு அவனிலேயே விட வேண்டாம்.கருகிவிடும்.

இப்போது சுவையான,கரகரப்பான பேக்(ட்)டு உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார்.நன்றாக ஆறிய பிறகு எடுத்து சாப்பிடவும்.

Advertisements

6 பதில்கள் to “பேக்(ட்)டு உருளைக்கிழங்கு சிப்ஸ்/Baked potato chips”

  1. Mahi Says:

    சூப்பரா இருக்கு சிப்ஸ்! என்கிட்ட சிப்ஸ் கட்டைல்லாம் இல்லையே! நீங்க கத்தில நறுக்கினீங்களா சித்ராக்கா? மொத்தமா செய்து வைச்சுகிட்டா நல்லாருக்கும், டெய்லியும் டீ டைம்ல, சாப்பாட்டு கடிச்சுக்கன்னு என்ஜாய் பண்ணலாம்! 🙂

  2. Mahi Says:

    /கொஞ்சம் இருக்கட்டுமே என்று ஸ்விட்ச் ஆஃப் செய்தபிறகு அவனிலேயே விட வேண்டாம்.கருகிவிடும்./ அனுபவம் பேசுதுன்னு நினைக்கிறேன், ஹாஹ்ஹா! 😀 எனிவேஸ், டிப்ஸுக்கு நன்றி! 😉

    • chitrasundar5 Says:

      மகி,

      நானும் இங்கு வந்துதான் வாங்கினேன். அதையும் பயன்படுத்த முடியாமல்தான் வைத்திருந்தேன்.கொஞ்ச நாட்களுக்குப் பிறகு ஒரு இந்தியத்தோழி கொடுத்ததாக வேற்று நாட்டுத் தோழி ஒருவர் எனக்குக் கொடுத்தார்.நல்ல கெட்டியான ப்ளாஸ்டிக்கில் கைப்பிடியெல்லாம் வைத்து சூப்பரான சிப்ஸ் கட்டை.அதுசரி பஜ்ஜிக்கு என்ன பன்றிங்க.

      “அனுபவம் பேசுதுன்னு நினைக்கிறேன்”_ கண்டுபிடிச்சாச்சா.மகின்னா யாரு? பாவக்காயில் செய்தேன்.ஓவன் ஆறிப்போய் லேஸாகத்தான் சூடு இருந்தது.இடத்த அடச்சிட்டிருக்கேன்னு ட்ரேயைக் கொஞ்சம் உள்ளே வைத்ததுதான்.கலர்கூட‌ அழகான ப்ரௌன் நிறத்திலிருந்தது.ஆனால் சுவை மட்டும் தீய்ந்துபோன வாஸனை.

      தேவைக்கு மட்டும் செஞ்சிக்கோங்க.நிறைய செய்து வைத்தால் நமுத்துப்போய்விடும். வருகைக்கு நன்றி மகி.

      • Mahi Says:

        /பஜ்ஜிக்கு என்ன பன்றிங்க./ கத்தியால் ஸ்லைஸ் பண்ணிருவேன், வேற என்ன செய்வது?! 🙂 கொஞ்ச நாளா வாழைக்காய் பஜ்ஜிய விட எங்க வீட்டில கத்தரிக்கா (இட்டாலியன் எக்ப்ளான்ட்) பஜ்ஜிதான் அடிக்கடி செய்யறது.

        நீங்க சிப்ஸ் கட்டைய என்ஜாய் பண்ணுங்க..முடிஞ்சா ஒரு போட்டோவும் போடுங்க, எப்படி இருக்குன்னு பார்க்க ஆசையா இருக்குது! 😉

  3. chollukireen Says:

    எண்ணெய் அதிகம் சிலவில்லாத சிப்ஸ்.கொஞ்சம் பொருமையா
    செஞ்ஜால் அதிகமாக நன்மைதரும். எப்போ வேண்டுமோ அப்போ செய்யலாம் இல்லையா. உடம்புக்கு நல்லது. நல்ல குறிப்பு.

    • chitrasundar5 Says:

      காமாஷி அம்மா,

      கொஞ்சம் வேலை மெனக்கெடல்தான். படத்தில் ஒரு லேயர் போட்டுள்ளேன். சமயங்களில் இரண்டுமூன்று லேயர்கள்கூட போட்டுவிடுவேன். கொஞ்சம் கவனமாகத் திருப்பிவிட்டு எடுத்துவிட வேண்டும்.

      தாமதமான பதில். ஒன்றுமில்லை அம்மா. இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை. மகளுடன் சேர்ந்து க்ளீனிங்,வாக்கிங்,குக்கிங் இப்படியாகப் போகிறது.அன்புடன் சித்ரா.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: