மஞ்சள் பூசணி & வேர்க்கடலைக் கூட்டு

மஞ்சள் பூசணியை எப்படி சமைத்தாலும் அதற்கேயுரிய இனிப்புச் சுவை மேலோங்கி நிற்கும்.ஒரு சிலருக்குப் பிடிக்காது.(எனக்கும்தான்).இந்தக் காயை விரும்பிச் சாப்பிடுபவர்களுக்கு இந்த செய்முறை உதவுமே என்பதால்தான் இந்தப் பதிவு.

பார்க்க வெள்ளரிப்பழம் போலவே எவ்வளவு அழகாக உள்ளது!

        

தேவையானவை:

மஞ்சள் பூசணி_படத்திலுள்ளதில் 1/4 கீற்று
வறுத்த வேர்க்கடலை_ஒரு கைப்பிடி(தோல் நீக்கியது)
காய்ந்த மிளகாய்_3
உப்பு_தேவைக்கு

செய்முறை:

பூசணியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி,ஒரு கெட்டியானப் பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் ஒரு 1/4 டம்ளர் தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.

மிளகாயை வெறும் வாணலில் போட்டு சூடாகியதும் எடுத்து ஆறியதும் வேர்க்கடலையுடன் சேர்த்துக் கரகரப்பாகப் பொடித்துக்கொள்ளவும்.

காய் அடிப் பிடிக்காமல் கிண்டிவிடவும்.காய் வேகும்போதே தண்ணீர் விட்டுக்கொள்ளும்.நன்றாக வெந்த பிறகு உப்பு சேர்த்துக் கிளறி விடவும்.முதலிலேயே உப்பு சேர்த்தால் காயின் அளவைப் பார்த்து நிறைய சேர்த்துவிடுவோம்.இது நீர்க்காய் என்பதால் வெந்த பிறகு அளவு குறைந்திருக்கும்.

இப்போது பொடித்து வைத்துள்ளப் பொடியைக் காயுடன் சேர்த்து நன்றாகக் கிளறிவிட்டு இறக்கவும்.

இதை சாதாரண கூட்டுபோலவே சாதத்துடன் சேர்த்து அல்லது தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.

Advertisements

8 பதில்கள் to “மஞ்சள் பூசணி & வேர்க்கடலைக் கூட்டு”

  1. chollukireen Says:

    கார சாரமா கறி செய்து துளி வெல்லமும் சேர்த்து ரஸித்து சாப்பிடுபவர்களுமுண்டு. கூட்டு முறை நன்றாக உள்ளது.பறங்கிக்காய் என்று இதைச் சொல்வதுமுண்டு.

    • chitrasundar5 Says:

      காமாஷி அம்மா,

      இந்தக் காயை வைத்து என்னால் எதுவும் செய்ய முடியல.நீங்க நிறைய செய்முறை சொல்லியிருந்தீங்க.யாராவது ஒருவர் சாப்பிடுவதாக இருந்தாலும் பரவாயில்லை.

      எங்க வீட்டில் பாட்டி மட்டுமே சாப்பிட்டு பார்த்திருக்கேன்.அப்படியே நறுக்கிப்போட்டு வேகவைத்து மிளகாய் கிள்ளிப்போட்டுத் தாளித்து சாப்பிடுவாங்க.வருகைக்கு நன்றி அம்மா.

  2. Mahi Says:

    சித்ராக்கா, எங்க வீட்டுக்காரரும் உங்க கட்சிதான்! இனிப்பான காய்கள்னா அவ்வளவா சாப்பிடமாட்டார்! கசப்பும் அப்படியே! 🙂

    எனக்கு இந்தக் காய் அதுவும் இனிப்பா இருக்கற காய்னா ரொம்ப பிரியம்! இந்தக் காயை நாங்க அரசாணிக்காய்னு சொல்லுவோம். சாம்பார்ல போட்டா அருமையா இருக்கும். கல்யாண வீடுகள்ல இந்த காய் இல்லாம சாம்பார் இருக்காதுன்னா பார்த்துக்கோங்க! பொங்கல் சீஸன்லதானே இந்தக்காயும் விளைச்சல் அதிகமா இருக்கும்..பொங்கலுக்கு முதல்நாள் சங்கராந்தி-க்கு இந்தக்காயும் அவரைக்கொட்டையும் சேர்த்து பொரியல் செய்து படைப்போம்.

    காமாட்சிம்மா சொல்வது மாதி காரசாரமா கறி செய்து சாப்பிடுவதுன்னா..ஆஹா! நினைக்கையிலயே வாய் ஊறுது! 😉 இங்கே கிடைக்கும் மஞ்சள் பூசணி நம்மூர் காய் மாதிரி ருசி இருக்கறதில்லை, ஆனாலும் விடாம எப்பவாவது ஒருமுறை வாங்கி சாம்பார் – பொரியல்னு செய்வேன். உங்க மெதட் வித்யாசமா இருக்குது. சிம்பிளாகவும் இருக்கு, அடுத்த முறை வாங்கினால் இப்படி செய்து பார்க்கிறேன்.

    • chitrasundar5 Says:

      மகி,

      “இந்தக் காய் அதுவும் இனிப்பா இருக்கற காய்னா ரொம்ப பிரியம்,சாம்பார்ல போட்டா அருமையா இருக்கும்,காரசாரமா கறி செய்து சாப்பிடுவதுன்னா. ஆஹா! நினைக்கையிலயே வாய் ஊறுது!,விடாம எப்பவாவது ஒருமுறை வாங்கி சாம்பார் – பொரியல்னு செய்வேன்”_ஆச்சர்யமா இருக்கு.காமாஷி அம்மாகூட நிறைய செய்முறை சொன்னாங்க.நான்தான் எதுவுமே செய்யல.

      பொங்கலுக்கு படைக்கறதுக்காக ஒரு கீற்று வாங்குவாங்க.ஆனால் சமைத்ததில்லை.மத்தபடி வெள்ளைப்பூசணிக்காய் (கல்யாணப்பூசணி)வாங்கி சாம்பார்,கூட்டு,மோர் குழம்பு எல்லாம் செய்வேன்.

      இனிப்பான காய்தான் பிடிக்காது.ஆனால் சுண்டைக்காய்,பாவக்காய் எல்லாம் விரும்பி சாப்பிடுவோம்.

      இந்த முறையில் சுரைக்காய் வச்சி செய்தால் சூப்பரா இருக்கும்.செஞ்சி நான் மட்டுமே சாப்பிடுவேன்.நீங்களும் ஒரு தடவ செஞ்சி பாருங்க.நன்றி மகி.

      • Mahi Says:

        /இந்த முறையில் சுரைக்காய் வச்சி செய்தால் சூப்பரா இருக்கும்./ ஆஹா! சுரைக்காய் இருக்கு, செய்து பார்த்திடறேன்! தகவலுக்கு நன்றி! 😉

      • chitrasundar5 Says:

        மகி,
        சுரைக்காயில் செஞ்சி பாருங்க.இதன் செய்முறைகூட இங்க இருக்கு.

  3. Mahi Says:

    எண்ணெயே இல்லாமல் ஒரு சுவையான பொரியல் செய்முறையைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி! சுரைக்காயில் செய்து பார்த்தாச்சு,,சீக்கிரம் ப்ளாகிலும் வரும்! 😉

    • chitrasundar5 Says:

      ‘சுரைக்காயில் செய்து பார்த்தாச்சு’_ சந்தோஷம்.உங்களுக்குப் பிடிச்சிதா!செய்து பார்த்து,சுவையான பொரியல்னுவேர சொல்லிட்டீங்க.நன்றி மகி.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: