அவரைக்காய்&வேர்க்கடலை பொரியல்

தேவையானவை:

அவரைக்காய் நறுக்கியது_ஒரு கிண்ணம்
பச்சை வேர்க்கடலை(அ)காய்ந்த வேர்க்கடலை_ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம்_இரண்டு
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
கொத்துமல்லி இலை
தேங்காய்ப்பூ_ஒரு டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு,உளுந்து,சீரகம்,கடலைப் பருப்பு,பெருங்காயம்,கறிவேப்பிலை

செய்முறை:

பச்சை வேர்க்கடலையானால் அப்படியே சேர்த்துக்கொள்ளலாம்.காய்ந்தது என்றால் முதல் நாளே ஊற வைத்து,நன்றாக ஊறியதைப் பயன்படுத்த வேண்டும்.

அவரைக்காய்,வெங்காயம் இவற்றை விருப்பமான வடிவத்தில் அரிந்து கொள்ளவும்.

ஒரு வாணலில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு,முதலில் வெங்காயத்தையும்,அடுத்து அவரைக்காய், வேர்க்கடலை சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கியதும் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்துக்கிளறி காய் வேகுமளவு தண்ணீர் ஊற்றி மூடி வேக வைக்கவும்.

இடையிடையே கிண்டி விடவும்.அவரை,கடலை இரண்டும் வெந்து தண்ணீர் வற்றியதும் தேங்காய்ப்பூ&கொத்துமல்லி தூவி இறக்கவும்.

Advertisements

6 பதில்கள் to “அவரைக்காய்&வேர்க்கடலை பொரியல்”

  1. ranjani135 Says:

    எங்கள் வீட்டில் அவரைக்காய் அவ்வளவாகப் பிடிக்காது. அடுத்தமுறை உங்கள் முறையில் செய்து பார்க்கிறேன். ஒரு புதுமையான பொரியல் தந்ததற்கு பாராட்டுக்கள்.

    • chitrasundar5 Says:

      ரஞ்சனி,

      உங்களுக்கு அவரைக்காய் பிடிக்காதா!அடுத்த முறை இப்படி செஞ்சி பாருங்க. ஏதாவதொரு வகையில் சேர்த்துக்கொண்டால் நல்லதுதானே.பாராட்டுகளுக்கு நன்றி.

  2. chollukireen Says:

    பச்சை வேர்க்கடலை எதனுடன் சேர்ந்தாலும் ருசியை அதிகமாகவே மாற்றும். நன்றாக இருக்கிறது.

    • chitrasundar5 Says:

      காமாஷிமா,

      பச்சை வேர்க்கடலை இன்னும் கொஞ்ச நாளில் வரும்.காய்ந்த கடலையை ஊற வச்சுத்தான் போட்டேன்.நம் ஊரில் என்றால் பச்சைக்கடலை எல்லா சீஸனிலும் கிடைக்கும்.வருகைக்கு நன்றி அம்மா.

  3. Mahi Says:

    அவரைக்காயை பார்த்தே பலநாளாச்சு. போன முறை ஊருக்கு போனப்ப செய்தேன், ஆனால் கடலை சேர்ப்பது புதுசா இருக்கு சித்ராக்கா! சூப்பரா இருக்கு பொரியல்.

    • chitrasundar5 Says:

      வாக்கிங் போகும்போது சும்மா வழியில் இருந்த கடைக்குள் போனேன். அவரையும்,கொத்தவரையும் புதிதாக இருந்ததால் வாங்கினேன்.நிறைய கடைகள் இருப்பதால் ஒன்றில் இல்லாவிட்டாலும் இன்னொன்றில் கிடைத்துவிடும்.

      பச்சைக்கடலை சேர்த்துதான் செய்வாங்க.அது இல்லாததால் காய்ந்ததை ஊற வைத்து செய்தேன்.வருகைக்கு நன்றி மகி.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: