யோசித்து வையுங்கள்,நாளை பார்க்கலாம்.
purple,pink,red எல்லாமும் கலந்த வித்தியாசமான ஒரு நிறத்தில் வெண்டைக்காயைப் பார்த்ததும் ப்ளாக்கில் போட்டால் எல்லோரும் ‘வாவ்’ சொல்லுவீங்கன்னு நெனச்சித்தான் படத்தைப் போட்டேன்.இந்தக் காயை ஏற்கனவே எல்லோரும் பார்த்துவிட்டீர்கள் என்றதும் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.
இதை வைத்து ஒருசில சமையல்கள் செய்தாச்சு.பதிவுகளும் இங்கேயுள்ளன.இப்போது எளிதில் செய்யக்கூடிய பச்சடியைப் பார்க்கலாம்.
வெண்டைக்காய் தயிர் பச்சடி
தேவையானவை:
வெண்டைக்காய்_சுமார் 10
பச்சைமிளகாய்_1
தயிர்_1/2 கப்
உப்பு_சிறிது
தாளிக்க:
எண்ணெய்,கடுகு
செய்முறை:
வெண்டைக்காயை மெல்லிய வில்லைகளாக்கவும்.பச்சைமிளகாயை விருப்பத்திற்கேற்ப அரிந்து வைக்கவும்.ஒரு வாணலில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பச்சைமிளகாய்,வெண்டைக்காய் இரண்டையும் சிறிது உப்பு தூவி,வதக்கி, தயிரில் சேர்க்கவும்.
வெண்டைக்காய் பச்சடி என்றாலே சாப்பிடும்போது புதிதாக செய்தால்தான் நன்றாக இருக்கும்.முன்னமே செய்து வைத்தால் சாப்பிடும்போது கொஞ்சம் கொழகொழப்பு தெரியும்.
முதலில் தயிரை தாளித்து வைத்துக்கொண்டு சாப்பிடப்போகும்போது வெண்டைக்காயை வதக்கியும் சேர்க்கலாம்.
வெண்டைக்காயை அதன் கொழகொழப்பினால் குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அவர்களுக்கு படத்திலுள்ளதுபோல் நறுக்கிக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்..வழவழப்பும் தெரியாது.
1:54 பிப இல் ஜூலை 18, 2012
வெண்டைக்காய்…லேடீஸ் ஃபிங்கர்! :))) பிங்க் கலர் வெண்டைக்காய் from Farmer’s Market?! right?!
🙂 😉 🙂
2:05 பிப இல் ஜூலை 18, 2012
ஆமாம்.நீங்க சொன்னது எல்லாமே சரிதான்.நான் இப்பத்தான் இப்படி ஒரு கலர்ல பார்த்தேன்.
8:48 பிப இல் ஜூலை 18, 2012
nattu vendaikai as called in india
10:20 பிப இல் ஜூலை 18, 2012
சரண்யா,
வாங்கவாங்க.புதுவரவு.மிக்க மகிழ்ச்சி.இது நாட்டு வெண்டைக்காயா?எங்க வீட்டில் இவரும் ஏற்கனவே பார்த்துள்ளதாக சொன்னார்.புது நிறத்தில் பார்த்ததும் ப்ளாக்கில் போட்டுவிட்டேன்.
உங்க ப்ளாக்கின் பெயரைச் சொன்னால் நாங்களும் பார்ப்போமே.வருகைக்கு நன்றி.
7:10 பிப இல் ஜூலை 19, 2012
thank you chitra. my blog is
http://saraniyapt.blogspot.in/
sharanya
3:25 முப இல் ஜூலை 19, 2012
நம்ம ஊர் பக்கத்திலேயும் இம்மாதிறி வெண்டைக்காய் உண்டு.
8:35 முப இல் ஜூலை 19, 2012
காமாஷிமா,
நான்தான் ஏதோ புதிதாக பார்த்ததாக நினைத்துவிட்டேன்.வருகைக்கு நன்றி அம்மா.அன்புடன் சித்ரா.
10:14 முப இல் ஜூலை 20, 2012
தயிர் பச்சடி நல்லாப் பிடிக்கும். பார்க்கவே பசி கிளம்புகிறது.
10:36 முப இல் ஜூலை 20, 2012
Dr.M.K.Muruganandan,
எளிமையான சமையல்தானே,செய்து சாப்பிடுங்கள்.வருகைக்கு நன்றி.