இதனை கீரைப் பொரியல் போலவே செய்ய வேண்டியதுதான்.சமைக்கும் நேரமும் குறைவு.சுவையோ சாதாரண கீரையைவிட அதிகம்.
தேவையானவை:
ப்ரோக்கலி ரே(ய்)ப் நறுக்கியது_ஒரு கிண்ணம்
சின்னவெங்காயம்_3
பச்சை மிளகாய்_1
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
தாளிக்க:
எண்ணெய்,கடுகு,உளுந்து,சீரகம்,கடலைப்பருப்பு,காய்ந்த மிளகாய் ஒன்று,பெருங்காயம்,கறிவேப்பிலை.
செய்முறை:
ப்ரோக்கலி ரே(ய்)பை சுத்தம்செய்து,நீரில் அலசிய பிறகு விருப்பமான அளவில் அரிந்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயையும் அரிந்து வைக்கவும்.
ஒரு வாணலில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியதைத் தாளித்த பிறகு வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இவை வதங்கியதும் ப்ரோக்கலி ரே(ய்)பை சேர்த்து இரண்டு கிளறுகிளறி உப்பு,தேங்காய்ப் பூ,கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.
ப்ரோக்கலி ரே(ய்)ப் சீக்கிரமே வெந்துவிடும்.மூடி போட்டு,தண்ணீர் தெளித்து மற்ற கீரைகள் மாதிரி வேகவைக்க வேண்டாம்.
இது எளிமையான,சத்தான,சீக்கிரமே செய்யக்கூடிய அருமையான பொரியலாகும்.
4:16 பிப இல் ஜூலை 28, 2012
சத்தான பொரியல்..அடுத்த முறை கீரையுடன் இருக்கும் ப்ரோக்கலியை தேடி வாங்கறேன். 🙂
12:06 பிப இல் ஜூலை 29, 2012
சீக்கிரமே தேடி வாங்குங்க.வருகைக்கு நன்றி மகி.
7:05 முப இல் ஓகஸ்ட் 2, 2012
(http://mahikitchen.blogspot.com/) தளம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
(ப்ரோக்கலி ரே(ய்)ப் பொரியல்/Broccoli rabe poriyal) துணைவியார் குறித்துக் கொண்டார்கள்… நன்றி சகோ…
6:34 பிப இல் ஓகஸ்ட் 2, 2012
திண்டுக்கல் தனபாலன்,
உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதைத் தெரிவித்தமைக்கு மீண்டும் நன்றி.