இந்தக் காயை எங்க ஊர் பக்கம் பயத்தங்காய் என்றே சொல்வோம்.இதிலுள்ள பயறை பெரும்பயறு என்போம்.மிகச்சிறு வயதில் சாப்பிட்டது.இப்போதெல்லாம் இதைப் பார்ப்பதே அரிது.இங்கு வந்த புதிதில் இந்தக் காயைப் பார்த்ததும் மகிழ்ச்சி.
விலை அதிகமானாலும் கிடைக்கிறதே என்பதில் சந்தோஷம்.வாங்கும்போது மிகவும் முற்றியதாக இல்லாமலும், மிகவும் பிஞ்சாக இல்லாமலும் நடுத்தரமாக இருப்பதைப் பார்த்து தெரிவுசெய்ய வேண்டும்.
இதை வேக வைக்க இட்லிப் பாத்திரம் மாதிரியான அகலமானப் பாத்திரம்தான் சிறந்தது..தேவையானதை எடுத்து தண்ணீரில் அலசிவிட்டு வேக வைக்கும் பாத்திரத்தில் போட்டு காய் மூழ்குமளவு தண்ணீர் விட்டு,உப்பு போட்டு, மூடி வேக வைக்க வேண்டும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்து 15 லிருந்து 20 நிமிடங்களுக்குள் வெந்துவிடும்.
ஒன்றை எடுத்து வெந்துவிட்டதா என உரித்துப்பார்த்து மேற்கொண்டு வேக வைப்பதா அல்லது வேண்டாமா என முடிவு செய்யலாம்.
வேக வைத்தது மீதமானால் அடுத்த நாள் வெயிலில் காயவைத்து, பாதி காய்ந்தும், பாதி காயாமலும் இருக்கும்போது இன்னும் சுவையாக இருக்கும்.
8:35 பிப இல் ஓகஸ்ட் 2, 2012
சாப்பிடுவதற்கு அவ்வளவு சுவையாக இருக்கும்….
கிடைப்பது தான் அரிதாகி விட்டது…
பகிர்வுக்கு நன்றி…
தொடர வாழ்த்துக்கள்…
7:48 முப இல் ஓகஸ்ட் 4, 2012
வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.
1:08 பிப இல் ஓகஸ்ட் 3, 2012
இந்தக் காயை நான் முதல்முறை பார்க்கிறேன். 🙂 ஊரிலும் பச்சை தட்டக்காய்தான் பார்த்திருக்கிறேன், இந்தக் கலர் பார்த்ததில்லை. இப்படி வேகவைத்து சாப்பிடுவதும் இப்பொழுதுதான் தெரியும். பல புதிய விஷயங்களை அறிமுகப் படுத்துவதற்கு நன்றி! 🙂 🙂
7:52 முப இல் ஓகஸ்ட் 4, 2012
உங்க ஊரில் தட்டக்காயா!ஊரில் இன்னும் பச்சை,பீச் கலரிலும் பார்த்திருக்கேன்.ஆனால் அளவுதான் குட்டியா இருக்கும்.நன்றி மகி.
6:26 முப இல் ஓகஸ்ட் 12, 2012
பெறிய அளவிலே நீளமாக இங்கெல்லாம் நிறைய கிடைக்கிறது.
உருளைக்கிழங்குடன் வதக்கி காரஸாரமாக கறி ரொட்டிக்குச் செய்கிறார்கள். bodhi போடி என்று ஹிந்தியில் பெயர். காராமணிகாய், பயத்தங்காய் என்றும் நாம் சொல்லுவோம்.
கேரளாவில் பிரஸித்தம்.காய் பிஞ்சாக இருந்தால் கறி கூட்டு வகைகள். உறித்துச் சாப்பிட நீ சொல்லி இருக்கும் விதம் ரொம்ப ருசியாக இருக்கும். சாப்பிட்டமாதிரி இருக்கு.
3:36 பிப இல் ஓகஸ்ட் 12, 2012
காமாட்சி அம்மா,
நீநீநீண்ட நாட்களுக்குப்பிறகு பேசுவதுபோல் உள்ளது.இங்கும் சைனீஸ் லாங் பீன்ஸ் என்று நீளநீளமாக,பிஞ்சாகக் கிடைக்கிறது.வாங்கினால் பொரியல், கூட்டு எல்லாம் செய்யலாம்.காய்ந்த பயறை வேகவைத்து,சுண்டல் செய்து சாப்பிடுவதைவிட இது சுவையாக இருக்கும்.அன்புடன் சித்ரா.